Breaking News
Home / ஏனையவை / காரை பார்க் செய்துவிட்டு வீட்டின் கதவை மூடுவதற்குள் துப்பாக்கி முனையில் கொள்ளை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

காரை பார்க் செய்துவிட்டு வீட்டின் கதவை மூடுவதற்குள் துப்பாக்கி முனையில் கொள்ளை

டெல்லியைச் சேர்ந்தவர் வருண் பால். இவர் தனது மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார்.

காரை வீட்டின் முன்பு உள்ள வராண்டாவில் பார்க் செய்துவிட்டு, வருண் மட்டும் காரில் இருந்து இறங்கி கதவினை மூடச் சென்றுள்ளார். அதற்குள் முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் வாசலில் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் துப்பாக்கியுடன் வருணின் வீட்டினுள் நுழைந்தனர். வருணிடம் துப்பாக்கியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். வருணும் பயந்துப்போய் அனைத்தையும் கொடுத்துள்ளார்.அவரது மனைவி காரில் இருந்தபடியே செல்போனில் போலீசருக்கு தகவல் கொடுக்க முற்பட்டுள்ளார். அதற்குள் மர்ம நபர்களுள் ஒருவர் அவரை நெருங்கி அவரிடம் இருந்த பணம், நகை ஆகியவற்றை பறித்துள்ளார். இவை அனைத்தும் வீட்டு வராண்டாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் வீடியோவாக பதிவாகியிருக்கிறது. இதனையடுத்து வருண், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து அந்த நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த மர்ம நபர்கள், ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Check Also

That Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்!

பாலியல் வன்முறை, வன்புணர்வு (Rape) எனும் சொற்கள்எவ்வகையில் அடையாளம் காணப்படுகின்றன? 2012 இல்டெல்லி முனீர்கா நெடுஞ்சாலையில் பேருந்தில் கும்பல்–வன்புணர்வுக்கு உள்ளான அந்த பெண் அனுபவித்த அதேவேதனையை, ஒரு 19 வயதுப் பெண் தான் காதல் வயப்பட்டதாகநம்பும் இளைஞனுடனான முதலாவது உடலுறவு இச்சையிலும்அனுபவித்திருக்க நேர்ந்திருக்கும். இரு காதல் ஜோடிகளுக்கு இடையில், திருமணமான தம்பதியினருக்குள், இனம்புரியாத உணர்ச்சிகளை எப்படி புரிந்துகொள்வது எனும் கேள்வியுடனானபருவ வயதில் நடைபெறும் உடலுறவுகளில் என பல நிகழ்தகவுகளில் பாலியல்வன்முறைகள், வன்புணர்வுகள் இடம்பெறுகின்றன. அப்படி இடம்பெறும் இருண்ட அரங்குகளில் மனித இயல்பு என்ன, எப்படி அதைஎப்படி எடுத்துக் கொள்கிறது, எப்படி அதை வெளிப்படுத்துகிறது, எப்படிஉணர்ந்து கொள்கிறது என எல்லா பக்கங்களில் இருந்தும் அலசுகிறது இந்தஆவணத் திரைப்படம் «That Which Does Not Kill». Alexe Poukine  எனும் பெண்இயக்குனரின் நெறியாள்கையில் உருவாகியுள்ள இத்திரைப்படம்காட்சிப்படுத்தப்பட்ட போது, இடைநடுவில் பலர் எழுந்து சென்றதைஅவதானிக்க முடிந்தது. அவர்களால் படத்தின் நிஜப் பிரதிபலிப்பைதாங்கமுடியாது இருந்திருக்கலாம். காரணம் உண்டு. Ada எனும் 19 வயதுப் பெண், தனக்கு தெரிந்த ஒரு பையன் ஒருவனுடன், இரவுவிருந்துணவுக்கு சம்மதிக்கிறாள். அச்சந்திப்பில், அந்த விடயம் மிக விரைவாகநடந்தேறுகிறது. அவள் தடுத்து நிறுத்தவோ, தன்னை பாதுகாக்கவோமுயற்சிக்கவில்லை. 2013 இல் Alexe Poukine தன் முதலாவது திரைப்படத்தைகாட்சிப்படுத்திய ஒரு நிகழ்வில், Ada தனக்கு நடந்த இந்த அனுபவத்தை Poukine இடம் கூறியிருக்கிறாள். “9 வருடங்களுக்கு முதல் அவளுக்கு நடந்ததை தன்னிடம் அப்போது கூறியபோது, இந்தப் பெண் யார், ஏன் என்னிடம் இதைச் சொல்கிறாள், இதை வைத்துநான் என்ன செய்வது” என திகைத்ததாக கூறுகிறார் Alexe Poukine. பாலியல்வன்புணர்வு என்பது தொடர்பில் தான் எடுத்துவைத்திருந்த ஒருதத்துவத்திற்கும், தன்னுடைய சக நண்பர்கள் சிலரும் கூறிய இதே போன்ற  பாலியல் வன்முறை அனுபவங்களுக்கும் இடையில் இருக்கும் ஒருமுரண்நகையால் பெரிதும் ஆச்சரியப்பட்டதாகவும், அதையடுத்தேஇத்திரைக்கதையை உருவாக்கத் திட்டமிட்டதாகவும் கூறுகிறார். திரைப்படம் தொடங்குகிறது. ஒரு பெண், …