Breaking News
Home / latest-update / உலக கோப்பை கிரிக்கெட்: 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

உலக கோப்பை கிரிக்கெட்: 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்: 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

வெற்றி மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள்
லார்ட்ஸ்:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லார்ட்சில்  37-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக வார்னரும், பின்ச்சும்  களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 15 ரன்களை கடந்த போது கேப்டன் பின்ச் 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின்னர் வந்த வீரர்களை நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர்.
ஆஸ்திரேலியா 92 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிய உஸ்மான் கவாஜா 88 ரன்னில் வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த அலெக்ஸ் கேரி 71 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில்  50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழந்து 243 ரன்கள் எடுத்தது.
பின்னர் 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் சார்பில் மார்டின் குப்தில் மற்றும் ஹென்றி நிகோலஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ஹென்றி நிகோலஸ் 8(20) ரன்களும், மார்டின் குப்தில் 20(43) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்சன்னுடன், ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் 40(51) ரன்களும், அவரைத்தொடர்ந்து ராஸ் டெய்லர் 30(54) ரன்களும், கிராண்ட் ஹோம் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய டாம் லாதம் 14(28) ரன்களும், ஜேம்ஸ் நீசம் 9(22) ரன்களும், சோதி 5(4) ரன்னும், பர்குசன் (0) ரன் ஏதும் எடுக்காமலும், சாண்ட்னர் 12(29) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.
இறுதியில் டிரண்ட் போல்ட் 2(7) ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் நியூசிலாந்து அணி 43.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், ஜேசன் பெஹண்ட்ரோப் 2 விக்கெட்டுகளும், லயான், கம்மின்ஸ் மற்றும் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

Check Also

குணமடைந்த கடற் படையினரின் எண்ணிக்கை உயர்வு….!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 300 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!