Breaking News
Home / latest-update / கூடற்கலைக்கு இல்லை வயது!- பிரச்னைகளும் அணுகுமுறைகளும்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கூடற்கலைக்கு இல்லை வயது!- பிரச்னைகளும் அணுகுமுறைகளும்

தினந்தோறும் செய்தித்தாள்களைப் படிக்கும்போது தவறான பழக்கம், முறையற்ற உறவுகள் தொடர்பான சமூகச் சிக்கல்கள் கொலை அல்லது தற்கொலையில் முடிவது குறித்த செய்திகள் ஆக்கிரமித்திருப்பதைக் காணமுடிகிறது. அண்மைக் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் மிக அதிகமாக நடப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதிலும் நாற்பது வயதைக் கடந்தவர்களே இத்தகைய விவகாரங்களில் சிக்கித் தவிக்கிறார்கள். அதற்கான காரணம் என்னவாக இருக்கும், இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடுவது எப்படி என்பது பற்றி மனநல மருத்துவர் கேட்டோம்.

“பொதுவாகக் கள்ளக்காதல் விவகாரங்களில் சிக்கும் ஆணோ பெண்ணோ 35 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். மனிதனுக்கு எப்படிப் பசி ஏற்படுகிறதோ அது போலவே செக்ஸ் உணர்வும் ஏற்படும். ஆனால் ஆண், பெண் ஆகியோருக்கு அந்த டாக்டர் பன்னீர்செல்வம்உணர்வானது கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். ஆனால், ஒருவருக்கு இந்த உணர்வு இருக்கும்போது மற்றவர் அதற்கு மதிப்பளிக்காமல் புறக்கணிப்பது என்பது தவறான செயலுக்கு வழிவகுத்துவிடும். அதனால் இருவருமே 35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட வயதில், அதிகமாக பாசத்தைக் காட்ட வேண்டும். இந்த வயதின்போது வீட்டில் உள்ள குழந்தைகள், வளர்ந்தவர்களாக இருக்கலாம். அதனால் செக்ஸ் உறவில் ஈடுபட முடியாத நிலை ஏற்படலாம். அல்லது அந்த வயதுக் காலத்தில் ஆண்கள் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதால் பிற விஷயங்களில் நாட்டம் ஏற்படாமல் போகலாம். ஆனால், ஒருவருக்கு செக்ஸில் இன்ட்ரெஸ்ட் இருக்கும்போது மற்றொருவர் அதைப் புறக்கணிப்பதோ மதிப்புக் கொடுக்காமல் இருப்பதோ தவறானது.



குடும்பத்தில் உள்ள ஆணும் பெண்ணும் மற்றொருவரைப் புரிந்துகொண்டு அனுசரணையாகவும் அன்புடனும் நடந்துகொள்ள வேண்டும். முக்கியமாக அதிக பாசத்துடன் பேச வேண்டும். அப்படி இருக்காமல் அவரவர் வேலையைச் செய்துகொண்டு பாராமுகமாக இருந்தால், அன்புக்காக ஏங்கும் நிலை ஏற்பட்டு பிறருடன் தவறான உறவுக்குள் செல்லும் ஆபத்து ஏற்படலாம். நாற்பது வயது காலத்தில், பெண்களுக்கு உடல்ரீதியாக சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. மெனோபாஸ் நிற்பதால் ஹார்மோன் சுரப்பு குறைகிறது. அதனால் அவர்களுக்கு செக்ஸ் மீதான நாட்டம் குறையலாம். சிலருக்கு செக்ஸில் ஈடுபட்டால் வலி ஏற்படலாம். ஆனால், அதற்கெல்லாம் தற்போது மருந்துகள் கிடைக்கின்றன. அதனால் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். நாற்பது வயதைக் கடந்த தம்பதிகள் தங்களுக்குள் மனம் விட்டுப் பேச வேண்டும். பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறிய பரிசுகளைக் கொடுப்பது, பரஸ்பரம் புகழ்வது, வெளியிடங்களுக்குச் செல்வது என உற்சாகத்துடன் செயல்பட வேண்டும். ஒருவருக்கொருவர் பாசத்துடனும் நேசத்துடனும் செயல்பட்டாலே உறவுச் சங்கிலியில் தவறுகளுக்கு இடம் இருக்காது ’’ என்கிறார்.



Check Also

வன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் …