Breaking News
Home / latest-update / That Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

That Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்!

பாலியல் வன்முறைவன்புணர்வு (Rape) எனும் சொற்கள்எவ்வகையில் அடையாளம் காணப்படுகின்றன? 2012 இல்டெல்லி முனீர்கா நெடுஞ்சாலையில் பேருந்தில் கும்பல்வன்புணர்வுக்கு உள்ளான அந்த பெண் அனுபவித்த அதேவேதனையைஒரு 19 வயதுப் பெண் தான் காதல் வயப்பட்டதாகநம்பும் இளைஞனுடனான முதலாவது உடலுறவு இச்சையிலும்அனுபவித்திருக்க நேர்ந்திருக்கும்.

இரு காதல் ஜோடிகளுக்கு இடையில்திருமணமான தம்பதியினருக்குள்இனம்புரியாத உணர்ச்சிகளை எப்படி புரிந்துகொள்வது எனும் கேள்வியுடனானபருவ வயதில் நடைபெறும் உடலுறவுகளில் என பல நிகழ்தகவுகளில் பாலியல்வன்முறைகள்வன்புணர்வுகள் இடம்பெறுகின்றன.

அப்படி இடம்பெறும் இருண்ட அரங்குகளில் மனித இயல்பு என்னஎப்படி அதைஎப்படி எடுத்துக் கொள்கிறதுஎப்படி அதை வெளிப்படுத்துகிறதுஎப்படிஉணர்ந்து கொள்கிறது என எல்லா பக்கங்களில் இருந்தும் அலசுகிறது இந்தஆவணத் திரைப்படம் «That Which Does Not Kill». Alexe Poukine  எனும் பெண்இயக்குனரின் நெறியாள்கையில் உருவாகியுள்ள இத்திரைப்படம்காட்சிப்படுத்தப்பட்ட போதுஇடைநடுவில் பலர் எழுந்து சென்றதைஅவதானிக்க முடிந்ததுஅவர்களால் படத்தின் நிஜப் பிரதிபலிப்பைதாங்கமுடியாது இருந்திருக்கலாம்காரணம் உண்டு.

Ada எனும் 19 வயதுப் பெண்தனக்கு தெரிந்த ஒரு பையன் ஒருவனுடன்இரவுவிருந்துணவுக்கு சம்மதிக்கிறாள்அச்சந்திப்பில்அந்த விடயம் மிக விரைவாகநடந்தேறுகிறதுஅவள் தடுத்து நிறுத்தவோதன்னை பாதுகாக்கவோமுயற்சிக்கவில்லை. 2013 இல் Alexe Poukine தன் முதலாவது திரைப்படத்தைகாட்சிப்படுத்திய ஒரு நிகழ்வில், Ada தனக்கு நடந்த இந்த அனுபவத்தை Poukine இடம் கூறியிருக்கிறாள்.

“9 வருடங்களுக்கு முதல் அவளுக்கு நடந்ததை தன்னிடம் அப்போது கூறியபோதுஇந்தப் பெண் யார்ஏன் என்னிடம் இதைச் சொல்கிறாள்இதை வைத்துநான் என்ன செய்வது” என திகைத்ததாக கூறுகிறார் Alexe Poukine. பாலியல்வன்புணர்வு என்பது தொடர்பில் தான் எடுத்துவைத்திருந்த ஒருதத்துவத்திற்கும்தன்னுடைய சக நண்பர்கள் சிலரும் கூறிய இதே போன்ற  பாலியல் வன்முறை அனுபவங்களுக்கும் இடையில் இருக்கும் ஒருமுரண்நகையால் பெரிதும் ஆச்சரியப்பட்டதாகவும்அதையடுத்தேஇத்திரைக்கதையை உருவாக்கத் திட்டமிட்டதாகவும் கூறுகிறார்.

திரைப்படம் தொடங்குகிறதுஒரு பெண், 25-30 வயதிருக்கும்.

Ada 19 வயதில் முதன் முதலில் சந்தித்த அப்பையனுடன் இருந்த நெருக்கம்எப்படி அவன் அதை எப்படி பயன்படுத்திக் கொண்டான் என்பது தொடர்பில்விவரிக்கும் மிக நீண்டதெளிவான, நுணுக்கமான, வலியின் ஒவ்வொரு அங்குலத்தையும் விவரிக்கும் சொற்தொடர்கள் கொண்ட பந்திகளைஒப்புவிக்கிறாள்அவள் ஏற்கனவே அதை மனப்பாடம் செய்திருக்கிறாள்உண்மையில் அப்பெண் தான் Ada என நம்பும் அளவுக்கு உணர்ச்சிகளை தனக்குநடந்தது போலவே ஒப்புவுக்கிறாள்.

Ada இரண்டாவது முறையாக அதே வாலிபனால்பாலியல் வன்புணர்வுக்குஉட்படுத்தப்பட்ட போது நடந்த அனுபவங்கள் இன்னொரு பெண்ணால், இம்முறை வயதில் மிக இளைய ஒருவரால் வாசிக்கப்படுகிறது.  Ada வின்ஒவ்வொரு வன்முறை பதிவுகளும்தேர்ந்த நடிப்புக்கலை கொண்டபெண்களால் இதே போன்று ஒப்புவுக்கப்படுகின்றனஒரு கட்டத்தில் Ada மறந்துஅப்பெண்களுக்குத் தான் இவை அனைத்தும் நடந்தன என நம்பத்தொடங்குகிறோம்ஒரு கட்டத்தில் இப்பெண்கள் அனைவருமே புனைவு எனவும்,  Ada இன் கதையை சொல்ல வந்தவர்கள் என இயக்குனர் காண்பிக்க விரும்புகிறார். அதற்காக, அக்கலைஞர்கள் Ada இன் கதை எழுத்துக்களைசொல்ல முடியாமல் தடுமாறும் நேரம்மறந்து போகும் நேரம்அல்லதுதங்களுக்கு நடந்த நிஜ அனுபவங்களில் மூழ்கிஅழத் தொடங்கும் நேரம் எனஅனைத்தும் இடையிடையே இத்திரைப்படத்தில் காண்பிக்கப்படுகிறது.

பெண்கள் மாத்திரம் பலிக்கடாக்கள் அல்லஆண்கள்திருநங்கைகள்ஓரினச்சேர்க்கையாளர்கள் என எவரும் பாலியல் வன்புணர்வுக்கு பலியாகலாம் எனும்நிஜத்தை சொல்லும் பல்வேறு நபர்களை படம் முழுவதும் காண்கிறோம்ஒருகட்டத்தில்இதில் எது அவர்களுக்கு நடந்ததுஇது எது Ada வுக்கு நடந்தது எனஅனைத்தையும் மறந்து போகிறோம்அந்த வலிகொண்ட உணர்ச்சிகளில்மாத்திரம் புலன் செலுத்துகிறோம்படம் முடிவடையும் போதுநீங்கள் ஆணாகஇருந்தால் நிச்சயம் கூணிக் குருகிப் போவீர்கள்ஆண்வர்க்கம்பெண்வர்க்கத்திடம் தீர்த்துக்கொள்ளும் வண்ணிச்சைஒரு வன்முறையாக கூடகருதப்படுவதில்லைபடம் முழுவதும் இசையில்லை. ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை வீட்டில் தனிநபர்களாக இருந்து விவரிக்கும் உரையாடல்கள்தவிர்த்து எந்த வன்முறைக் காட்சியும் படத்தில் இல்லை. “Sans Frapper” என்பதுஇத்திரைப்படத்தில் பிரெஞ்சு மொழித் தலைப்புஅர்த்தம், «அறையாமல்». ஆனால் இத்திரைப்படம் உங்களை அறையும்உடல் ரீதியில் ஒரு பருவப்பெண்ணுக்கு நீங்கள் இழைக்கும் உச்சகட்ட பாலியல் வண் தீங்கைஅந்த உடல்உறுப்பின் பெயர் சொல்லிஎந்த நேரத்தில்எப்படிஎன்னென்ன செய்தீர்கள்என்பது வரை அனைத்தையும் சொற்களால் விளக்கும் இத்திரைப்படம்இதற்காக எடுத்துக்கொண்ட ஒரே ஒரு ஆயுதம் புனைவுக் கதபாத்திரங்கள்

திரைப்படம் முடிவடைந்து கேள்விபதில் நிகழ்வில், Alexis Poukine, «படத்தில்இன்னமும் நிறையக் காட்சிகள் காண்பிக்கவில்லைஉதாரணத்திற்கு Ada மறுபடியும்அப்பையனிடம் போக விரும்பியிருந்தாள்நீண்ட வருடங்கள்அவனை சந்தித்திருக்காத போதும்» என்றார்

பொதுமக்களில் இருந்த வயதான ஒரு பெண்மணிஏன் இவ்வளவு நடந்தும் Ada அப்பையனை சந்திக்க விரும்பியிருக்கிறாள் என கேள்வி எழுப்பினாள்அதற்குPoukine ஒரு பதில் சொல்லிருந்தார். «அப்பையனால், Ada ஏன் இரண்டாவதுமூன்றாவது தடவையும்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டாள்ஏன்அப்பையன் அப்படிச் செய்தான்? என கேள்வி யாருக்கும் எழவில்லைஇப்போதுகூட Ada ஏன் அவனை சந்திக்க விரும்புகிறாள் என்றே கேட்கிறீர்கள் » என்கிறார் Poukine. 

தனக்கு நடந்தது ஒரு பாலியல் வன்புணர்வு «Rape» என்பதை புரிந்து கொள்ள 10 வருடங்கள் தேவைப்பட்டது Ada வுக்குஅவர்களுக்கு…?

Check Also

மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்!

இந்நிலையில் தற்போது மாத்தறை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது. இந்நிலையில், மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு …