Breaking News
Home / latest-update / முல்லைத்தீவில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

முல்லைத்தீவில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு

முல்லைத்தீவில் கடலுணவுகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் குறைந்த விலையில் கடலுணவுகளை பெறக்கூடியதாக இருந்தது.

தற்பொழுது அதிக விலை கொடுத்து பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கடற்தொழிலாளர்களிடம் வினவியபோது அவர்கள் தெரிவித்ததாவது,

முல்லைத்தீவு ஆழ்கடலில் சட்டவிரோத கடற்தொழில் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கரைவலைகளில் கடலுணவுகள் சிக்குவது மிகக்குறைவாக காணப்படுகின்றது. கரை நோக்கி வரும் மீன்களை ஆழ்கடலில் இடைமறித்து சட்டவிரோத கடற்தொழிலாளர்களினால் சூரையாடப்படுகின்றது.

இதன் காரணமாக கரைவலை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்களுக்கு குறைந்த விலைகளில் மீன்களை விற்க முடியாது உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கோரி சுண்டிக்குளம் கடற்தொழிலாளர்கள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு கையளிக்கவுள்ளார்கள்

Check Also

நள்ளிரவில் தடம் புரண்ட புகையிரதம்….தெய்வாதீனமாக உயிர் தப்பிய 250 பயணிகள்..!!

புகையிரதம் ஒன்று தடம்புரண்டதால் திருகோணமலை, மட்டக்களப்பிற்கிடையிலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு …