Breaking News
Home / latest-update / ராஜராஜ சோழன் விவகாரம் : இயக்குநர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ராஜராஜ சோழன் விவகாரம் : இயக்குநர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

கும்பகோணம் அருகே ராஜராஜ சோழனை அவதூறாக பேசினார் என பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமைய பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் ஜூன் -5 ஆம் திகதி உமர்பாரூக் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழனைப் பற்றிப் பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிரானது மேலும் சாதிகளுக்கு இடையே பிரிவினை மற்றும் பிளவை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது எனவே ரஞ்சித்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலர் ஒருவர் திங்கள் கிழமை முறைப்பாடு கொடுத்திருந்தார்.

இதையடுத்து ரஞ்சித் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 இன்படி கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது, பல்வேறு பிரிவினரிடையே விரோதத்தை உருவாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Check Also

தீவிரமாகும் கொரோனா வைரஸ் தாக்கம்….இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை..!!

சீனாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை சுகாதார …