Breaking News
Home / latest-update / அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு 83-வது இடம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு 83-வது இடம்

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான போர்ப்ஸ், ஒவ்வொரு துறைகளிலும் அதிக அளவில் சம்பாதிக்கும் நபர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு விளையாட்டுத்துறையில் விளம்பரம் மற்றும் சம்பளம் ஆகியவற்றின் மூலம் அதிக வருமானம் ஈட்டிய முதல் 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளம்பரங்கள் மூலமாக 21 மில்லியன் டாலரும், சம்பளமாக 4 மில்லியன் டாலரும் என ஆண்டுக்கு 25 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி 83-வது இடத்தை பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள அதிக வருமானம் ஈட்டும் 100 விளையாட்டு வீரர்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியரும், ஒரே கிரிக்கெட் வீரருமான விராட் கோலி 83-வது இடத்தை பிடித்துள்ளார். அதிக வருமானம் ஈட்டும் வீரராக அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி உள்ளார். அவர் 127 மில்லியன் டாலரை வருமானமாக ஈட்டியுள்ளார். போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ 109 மில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் 105 மில்லியன் டாலருடன் உள்ளார்.

நான்காவது இடத்தில் 94 மில்லியன் டாலருடன் மெக்சிகோ பாக்ஸர் அல்வெர்ஸ் உள்ளார். அவர் சமீபத்தில் ஒரு நிறுவனத்துடன் 5 வருடத்துக்கு மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 93.4 மில்லியன் டாலருடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

என்பிஏ வீரர்கள் ரஸல் வில்சன் மற்றும் ஆரோன் ரோட்ஜர்ஸ் இருவரும் முறைய 6 மற்றும் 7-வது இடத்தில் உள்ளனர். டைகர் உட்ஸ் 69.3 மில்லியன் டாலர் வருமானத்துடன் 11-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் செரீனா வில்லியம்ஸ் மட்டுமே. 29.2 மில்லியன் டாலருடன் 63-வது இடத்தில் உள்ளார்.

Check Also

ஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்

உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து தலைவர் கேன் வில்லியம்சன் …