கடந்த 8ஆம் திகதி இரவு 10 மணியளவில் குழந்தையின் உடலில் மாற்றங்களை அவதானித்த தாய் , குழந்தையை தூக்கிய போதும் மாற்றத்தை உணர்ந்துள்ளார்.
அதனால் உடனடியாக முச்சக்கர வண்டியில் , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.
கீரிமலை வீதி , பண்டத்தரிப்பை சேர்ந்த றொபேர்ட் சாள்ஸ் நகுலா என்பவர் கடந்த 5ஆம் திகதி பெண் சிசுவினை பிரசவித்தார். தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருந்ததையடுத்து கடந்த 6ஆம் திகதி வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு வைத்திய சிகிச்சை பயனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் குழந்தையின் உடலில் நீர் சத்து குறைவானமையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.