Breaking News
Home / latest-update / கிளிநொச்சியில் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் தீ பரவல்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கிளிநொச்சியில் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் தீ பரவல்

கிளிநொச்சி நகரில் நீதிமன்றத்திற்கு பின்புறமாகவுள்ள மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நீதிமன்றுக்கு பின்புறமாக சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியில் சிறைக்கைதிகளை கொண்டு துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஏற்கனவே விழுந்து காய்ந்த நிலையில் இருந்த ஆலமரத்திற்கு தீ வைத்த போது பாரியளவான சுவாலை எழுந்து மக்களின் குடியிருப்புகளில் உள்ள வான் பயிர்களுக்கும் பரவியுள்ளது.

இதனையடுத்து கரைச்சி பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.

எனினும் தீயணைக்கும் வாகனத்திலுள்ள நீர் தீர்ந்துவிட்ட நிலையில் தீயணைக்கும் பணி இடை நடுவில் முப்பது நிமிடங்களுக்கு மேல் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதன் பின் நீர்த்தாங்கிகள் மூலம் நீர் கொண்டுவரப்பட்டு ஒரு மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Check Also

வீடியோ: சரளமாக தெலுங்கு பேசி இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்க வாலிபர்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் இசாக் ரிக்சார்ட். இவர் அமெரிக்காவில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் பணிபுரிகிறார். சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் …