Breaking News
Home / latest-update / யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு மீட்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு மீட்பு

யாழ்ப்பாணம், மணியம் தோட்டம் பகுதியில் உள்ள காணியிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர்கள் இன்று காலை காணியை சுத்தம் செய்த போது, பழைய கைக்குண்டொன்று கிடப்பதை கண்டு இது தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கைக்குண்டை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கைக்குண்டினை செயலிழக்க செய்யும் நடவடிக்கையினை விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்து வருகின்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Check Also

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் இரணைமடுவில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள்..!!

கிளிநொச்சி இரணைமடுக் குளத்திற்குள் ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின …