Breaking News
Home / latest-update / வேலை மாறலாம், ஆனால் அடிக்கடி கூடாது! ஏன்?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வேலை மாறலாம், ஆனால் அடிக்கடி கூடாது! ஏன்?

நிறுவனத்தின் லட்சியத்தையும் உங்கள் லட்சியத்தையும் ஒன்றாக்கிக் கொள்ளுங்கள். நிறுவனம் தனது லட்சியத்தை அடையும்பட்சத்தில் உங்கள் லட்சியமும் நிச்சயம் நிறைவேறுவதாக இருக்கும்.

ன்றை இளைஞர்கள், வருடத்துக்கு ஒரு நிறுவனம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி அடிக்கடி வேலை மாறுவது, தனது எதிர்கால வாழ்க்கையை (வேலைவாய்ப்புகளை) தானே கொலை செய்வதற்குச் சமம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். விரும்பிய வேலை கிடைக்கவில்லை என்றால், கிடைத்த வேலையை விரும்பிச் செய்யும் பக்குவம் இன்றைய இளைஞர்களுக்கு வரவேண்டும். கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ள நினைப்பதால்தான் அடிக்கடி வேலை மாற்றத்தில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

வேலையில்லாத் திண்டாட்டம் தலைதூக்கி இருக்கும் இன்றைய நிலையில், வேலையை விடுவதும், அடிக்கடி வேலை மாறுவதும் சரியான போக்கு இல்லை. ஒரு நிறுவனத்தில் சம்பளம் குறைவாக இருக்கலாம், சில வசதிகள் இல்லாமல் இருக்கலாம், சில மாதங்களுக்கு இரவில்கூட வேலை பார்க்கச் சொல்லலாம். இவற்றையெல்லாம் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டால், அடிக்கடி வேலை மாறவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், இந்தப் பொறுமை இன்றைய இளைஞர்களிடம் இல்லை என்பதே உண்மை.

பாதகங்கள் என்னென்ன?

அடிக்கடி வேலை

* இதற்காக வேலை மாறிய விஷயத்தைச் சொல்லாமலும் இருக்க முடியாது. காரணம், இடைப்பட்ட காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தோம் என்ற கேள்விக்கு, பதில் சொல்ல வேண்டியிருக்கும் அல்லது பொய்யான ஒரு காரணத்தைச் சொன்னால் அதற்காகவே அடுத்த வேலை கிடைக்காமல்போகலாம்.

* ஒருவர் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தால்தான், `பணிக்கொடை’ என்று சொல்லப்படும் கிராஜுட்டி கிடைக்கும். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என ஒருவர் இரண்டு, மூன்று நிறுவனங்கள் மாறினால் இந்த கிராஜுட்டி தொகை கிடைக்காமலேயே போகும்.

* ஒருவர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது மூன்று ஆண்டுகள் வேலை செய்திருந்தால்தான், அடுத்த நிறுவனத்துக்கு வேலை தேடிச் செல்லும்போது அந்தப் பணியாளர் மதிக்கப்படுவார். அவருடைய பையோடேட்டாவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

* அடிக்கடி வேலை மாறும் ஒருவரை ஓர் அலுவலகத்தில் வேலைக்கு எடுத்தாலும், அவரிடம் அலுவலக ரகசியங்கள் எதுவும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். சக ஊழியர்களுக்குக் கிடைக்கும் பல சலுகைகள், அவருக்குக்  கிடைக்காமல்போகலாம். பதவி உயர்வில், சம்பள உயர்வில் தாமதம் ஏற்படலாம். அதனால் அடிக்கடி வேலை மாறி இதுபோன்ற விஷயங்களில் சிக்காமல் இருப்பது நல்லது.

அடிக்கடி வேலை மாறாமல் இருக்க…

அடிக்கடி வேலை

* முதலில் வேலையில் சேரும்போது அந்த வேலை பற்றிய பலம், பலவீனம், பிளஸ், மைனஸ்களை ஆய்வு செய்த பிறகு சேர்ந்தால், வேலையைவிட்டுச் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது.

* நிறுவனத்தின் லட்சியத்தையும் உங்கள் லட்சியத்தையும் ஒன்றாக்கிக்கொள்ளுங்கள். நிறுவனம் தனது லட்சியத்தை அடையும்பட்சத்தில் உங்கள் லட்சியமும் நிச்சயம் நிறைவேறுவதாக இருக்கும்.

* சம்பளம் அதிகம் என்ற ஒரே காரணத்துக்காக வேலை மாறுவது, கூடவே கூடாது. முதலில் அதிக சம்பளம் தந்து, பிறகு சம்பளத்தைக் குறைத்தாலும் நீங்கள் கேட்க முடியாது என்பதால், அதை மட்டுமே காரணமாக வைத்து வேலை மாறாதீர்கள்.

* சிறந்த நிறுவனங்கள், அந்த நிறுவனத்தில் நீண்ட காலமாக வேலை பார்ப்பவருக்குப் பொறுப்பான உயர்பதவியைத் தரும். ஆக, நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனத்தில் உயர்பதவியை அடைய வேண்டுமெனில், அடிக்கடி வேலை மாற வேண்டாம்.

Check Also

ஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்

உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து தலைவர் கேன் வில்லியம்சன் …