Breaking News
Home / latest-update / தீவிர சிகிச்சையில் கான்ட்ராக்டர் நேசமணி – உலக ட்ரெண்டிங்கில் #PRAY_FOR_NEASAMANI
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

தீவிர சிகிச்சையில் கான்ட்ராக்டர் நேசமணி – உலக ட்ரெண்டிங்கில் #PRAY_FOR_NEASAMANI

”தேவையில்லாத ஆணியை பிடுங்க சொன்னதால், ஆத்திரமடைந்து, சொந்த சித்தப்பாவின் தலையிலேயே சுத்தியலை போட்ட மகனின் கொடூரச் செயல், ஜமீன் பேலசில் அரங்கேரியுள்ளது. சுத்தியல் விழுந்ததில் சுய நினைவிழந்த கான்ட்ராக்டர் நேசமணியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது உடல் நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் இருப்பதாகவும், இரண்டு இட்லி சாப்பிட்டதாகவும் நம்பத்தகுந்த சோர்ஸிடம் இருந்து தகவல் வந்துள்ளது. சுத்தியலை போட்ட நேசமணியின் அண்ணன் மகனுக்கும், சதித்திட்டத்தில் உதவிய இரண்டு அப்பரசண்டிகளுக்கும் தக்க பாடம்புகட்ட, அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.”

இப்படித்தான் #Pray_for_Neasamani என்ற ஹாஷ்டேக்கில், ஃபிரெண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு காமெடி, க்ரைம் திரில்லர் வடிவம் பெற்று வருகிறது. இது அனைத்துக்கும் காரணம், காமெடியை சீரியஸாக பேசிக் கொண்ட ஒரு conversation. அதை கீழுள்ள படத்தில் காணலாம்.

தீவிர சிகிச்சையில் கான்ட்ராக்டர் நேசமணி - உலக ட்ரெண்டிங்கில் #Pray_for_Neasamani

நேசமணியை காப்பாற்றுவோம் நீங்களும் பிரே பண்ணுங்கள்!

 

Check Also

நாடு முழுவதும் அடைமழை! நீரில் மூழ்கிய பல வீடுகள்

நாடாளவிய ரீதியில் நிலவும் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டவியல ;திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 24 …