Breaking News
Home / latest-update / அமெரிக்காவில் சூறாவளி புயல்-வெள்ளம்: 2 பேர் பலி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அமெரிக்காவில் சூறாவளி புயல்-வெள்ளம்: 2 பேர் பலி

அமெரிக்காவில் ஒக்லகோமா மாகாணத்தில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. நள்ளிரவில் கடுமையாக காற்று வீசியது. அப்போது மழையும் கொட்டியது.

இதனால் ஒக்லகோமா நகரில் பல வீடுகள் தரைமட்டமாயின. வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இங்கு சூறாவளி புயல் தாக்கும் என முன் எச்சரிக்கை விடப்பட்டதால் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறினர்.

அங்கு மணிக்கு 136 முதல் 165 மைல் வேகத்தில் சூறாவளி புயல் வீசியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சூறாவளி புயல் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். 29 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

கடந்த 3-ந்தேதியும் இங்கு கடுமையான சூறாவளி புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 300 மைல் (480 கி.மீ.) வேகத்தில் காற்று வீசியது. 36 பேர் உயிரிழந்தனர்.

Check Also

வீடியோ: சரளமாக தெலுங்கு பேசி இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்க வாலிபர்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் இசாக் ரிக்சார்ட். இவர் அமெரிக்காவில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் பணிபுரிகிறார். சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் …