Breaking News
Home / latest-update / “மந்தம் ஏற்படலாம்… ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாம்பழம் வேண்டாம்!” – மருத்துவ விளக்கம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

“மந்தம் ஏற்படலாம்… ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாம்பழம் வேண்டாம்!” – மருத்துவ விளக்கம்

மாம்பழத்தை பொறுத்த வரை நறுக்காமல் அப்படியே சாப்பிட விருப்பப்படுபவர்கள்தான் அதிகம். மாம்பழங்கள் பழுக்க வைக்க நிறைய கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது என்பதால் மாம்பழத் தோலின் மீது உப்பு வைத்துத் தேய்த்துக் கழுவிய பின் சாப்பிடவும்.

குறிப்பிட்ட சீஸனில் மட்டும் கிடைப்பது மாம்பழம். முக்கனிகளுள் ஒன்றான அதை மோந்ததும் கிடைக்கும் அதி அற்புதமான வாசனைக்கு ஈடு இணை கிடையாது. ஆனால் அதை எப்படித் தேர்வு செய்ய வேண்டும், என்னவெல்லாம் அதில் சமைக்கலாம், எப்படிப் பழுக்க வைக்கலாம் என்கிற தகவலை நமக்கு மருத்துவரும் நிபுணரும் தருகிறார்கள்.

ஆரோக்கிய பலன்கள்

மாம்பழத்தில் வைட்டமின் C , பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துகள் உள்ளன. இதில் நம்மை எனர்ஜியுடன் செயல்பட வைக்கும். அதனால் சீஸன் சமயத்தில் தினம் ஒரு மாம்பழம் எடுத்துக்கொள்வது நல்லது.

மாம்பழத்தில் பெருமளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து (Polysaccharide)இருப்பதால், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.

மாம்பழத்தில் இரும்புச்சத்தாகவும் செயல்படும். அதனால் கர்ப்பிணிகள் கர்ப்ப காலங்களில் இரும்புச்சத்து உள்ள மாத்திரைகளை எடுத்துக்கொள்வதைவிட இரும்புச்சத்து நிறைந்த மாம்பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது.

மாம்பழங்களில் அதிகமான அளவு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது. தேவையான புரதத்தை உடலில் சுரக்க இது உதவி புரிகிறது.

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் மாம்பழத்தை உண்டு வரச் சுலபமாக எடையை அதிகரிக்கலாம். 150 கிராம் மாம்பழத்தில் சுமார் 85 கலோரிகள் அடங்கியுள்ளன. இதை உடல் சுலபமாக உட்கிரகித்து உடலை வளர்க்கச் செய்யும். மேலும் மாம்பழத்தில் உள்ள மாவுச்சத்து அதைச் சர்க்கரையாக மாற்றுவதால், எடையை அதிகரிக்க அது உதவும்.

கடைகளில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கும் பொழுது சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். ரசாயனங்களைக் கொண்டு பழுக்க வைக்கும் பழங்களை தவிர்த்தல் நன்று. இதை உண்டுவந்தால் தொண்டைக்கட்டு, நாவில் புண்கள், நா வறட்சி, வாந்தி ஆகியன ஏற்படும்.

மாம்பழம் பொதுவாக வெப்ப வீரியத்தைக் கொண்டது. எனவே, அளவிற்கு அதிகமாக உண்பது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

மாத விலக்கு சமயத்தில் பெண்கள் அதிகம் உட்கொள்ளும் பொழுது உதிரப்போக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அளவுடன் சாப்பிடுவது நல்லது.

நன்றாகக் கனிந்த மாம்பழங்களை உண்பது நல்லது. மாம்பழங்களைத் தனியே கடித்துச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதன் உள்ளே பூச்சிகள் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் மாம்பழத்தை நறுக்கி துண்டுகளாக உண்பது நல்லது.

ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் மாம்பழம் சாப்பிட்டால் மந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுப்பதை கூடுமானவரைத் தவிர்க்கலாம்.

மாங்காய் பழுக்க வைக்கும் முறை:

மாங்காய்களை வாங்கி வீட்டில் ஒரு சாக்கில் சுற்றி வைத்துப் பழுக்க வைக்கலாம். வேப்ப இலையைப் பரப்பி அதன் மீது மாம்பழங்களை வைத்து, வைக்கோலால் மூடி வைக்க இரண்டு நாளில் அவை பழுத்து விடும்.

மாங்காய்களை வாங்கி வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி ஈரத்தைத் துடைத்து இருட்டறையில் வைக்க ஒரே நாளில் மாம்பழமாகக் கனிந்துவிடும்.

ரெசிப்பிகள்: 

வரகு மாங்காய் சாதம்:

தேவையானவை:

 • வரகு – ஒரு கப்
 • துருவிய மாங்காய் – அரை கப்
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் – தேவையான அளவு
 • மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
 • காய்ந்த மிளகாய் – 3

தாளிக்க:

 • கடுகு – ஒரு டீஸ்பூன்
 • உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
 • கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
 • வேர்க்கடலை – ஒரு டீஸ்பூன்
 • கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

வரகைச் சுத்தம் செய்து உதிரியாக வேகவைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும். இத்துடன் துருவிய மாங்காய், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். மாங்காய் நன்கு வதங்கியவுடன் வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச்சத்து நிறைந்த உணவு என்பதால் கர்ப்பிணிகள் அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.

மாம்பழ ஸ்மூத்தி:

தேவையானவை:

 • கம்பு மாவு – 2 கப்
 • மாம்பழத் துண்டுகள்- ஒரு கப்
 • தயிர் – 2 கப்
 • நாட்டுச்சர்க்கரை – 2 டீஸ்பூன்
 • தேன் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

கம்பு மாவை தண்ணீரில் கரைத்து, அடிக்கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கூழ் போன்று காய்ச்சி ஆறவைக்கவும். இத்துடன் மாம்பழம், தயிர், நாட்டுச் சர்க்கரை கலந்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் தேன் கலந்து அரைமணிநேரம் ஃப்ரீட்ஜில் வைத்துப் பருகவும்.

டிப்ஸ்:

மாங்காய் ஊறுகாய் போடுகிறீர்கள் எனில் அதிக புளிப்பு கொண்ட நாட்டு மாங்காய்களை வாங்கிப் பயன்படுத்தலாம்.

மாம்பழத்தை பொறுத்த வரை நறுக்காமல் அப்படியே சாப்பிட விருப்பப்படுபவர்கள்தான் அதிகம். மாம்பழங்கள் பழுக்க வைக்க நிறைய கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது என்பதால் மாம்பழத் தோலின் மீது உப்பு வைத்துத் தேய்த்து கழுவிய பின் சாப்பிடவும்.

மாம்பழ ஜாம் செய்பவர்கள் அதிக இனிப்புள்ள காசாலட்டு மாம்பழங்களைத் தேர்வு செய்து ஜாமில் சேர்க்கும் சர்க்கரையின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.

மாம்பழ ஜூஸ், மில்க் ஷேக் என மாம்பழத்தை ஜூஸாக்கி சாப்பிடுவதை விட பழமாகச் சாப்பிடுவதே சிறந்தது முழுமையான மஞ்சள் நிறமாக இருக்கும் மாம்பழத்தை வாங்காமல் சிவப்பு நிறம் கலந்த மாம்பழங்களை வாங்குங்கள்.

Check Also

குருத்வாரா, கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு – அசாமில் பரபரப்பு

அசாமில் குருத்வாரா மற்றும் தேசிய நெடுஞ்சாலையருகே உள்ள கடையில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருத்வாரா, …