Home / latest-update / கொலைகாரன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கொலைகாரன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

‘திமிரு பிடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘கொலைகாரன்’. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்திருக்கிறார்.
மேலும் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இப்படம் ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.
தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார். விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவையும், ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

Check Also

அரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அரசாங்க ஊழியர்களுக்கான முக்கிய எச்சரிக்கையொன்றை பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ளது. இந்த விடயத்தை சுட்டிக்காட்டி அரச ஊடகமொன்று நேற்றைய …