தமிழ் சினிமாவில் ஒருசமயம் பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.
குறிப்பாக ஏராளமான நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் இவருக்கு ஒரு குறை இருக்கிறது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, நான் பெரிய நடிகர்களில் பலருக்கும் அம்மாவாக நடித்திருக்கிறேன். விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடிக்கவில்லை. இதனை ஒரு குறையாகவே கருதுகிறேன். ஆனால் அவருக்கு நான் அண்ணியாக நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் விரைவில் அவர் விஜய் உடனுடன் அம்மாவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகாசி படத்தில் விஜய்க்கு அண்ணியாக சரண்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 50 வயது ஆகும் இவர் சமீபத்தில், பிரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகின்றது.