Breaking News
Home / latest-update / ‘பூமியை போட்டோ எடுத்துப் பாக்கலாமே… ரெட்மி நோட் 7 போனை விண்வெளிக்கு அனுப்பிய ஷியோமி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

‘பூமியை போட்டோ எடுத்துப் பாக்கலாமே… ரெட்மி நோட் 7 போனை விண்வெளிக்கு அனுப்பிய ஷியோமி

ஷியோமி நிறுவனம், கடந்த சில மாதங்களுக்கு முன் நோட் 7 என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டது. இந்தியாவில் ரெட்மி நோட் 7 புரோ என்ற பெயரிலும், மற்ற நாடுகளில் ரெட்மி நோட் 7 விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையை அதிகப்படுத்தும் வகையில் பல்வேறு வித்தியாசமான வழிகளில் விளம்பரம் செய்துவருகிறது, ஷியோமி. முதலில், அதன் உறுதித் தன்மையை நிரூபிக்கும் வகையில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டது. தற்போது, மேலும் ஒரு புதிய முயற்சியாக ரெட்மி நோட் 7 போனை விண்வெளிக்கு அனுப்பிவைத்திருக்கிறது.

இதுதொடர்பான வீடியோவையும் ரெட்மி நோட் 7 போனில் எடுக்கப்பட்ட போட்டோக்களையும் ஷியோமி வெளியிட்டிருக்கிறது. பலூன் மூலமாக விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்ட இது, 35 கி.மீ உயரத்தை எட்டியிருக்கிறது. மேலும், அங்கே நிலவிய மைனஸ் 58 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையையும், 1KPa அளவுக்கு இருந்த வளிமண்டல அழுத்தத்தையும் தாக்குப்பிடித்திருக்கிறது. சில போட்டோக்களை எடுத்த பின்னர், எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக பூமிக்குத் திரும்பிவந்திருக்கிறது.

 

Check Also

கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி – மூவர் காயம்

கொழும்பு – கிரான்ட்பாஸ் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் …