Breaking News
Home / latest-update / அனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்

அனைத்து மங்களமும் அருளும் அட்சய திருதியை நன்னாள்

அட்சய திருதியை நன்னாளானது இந்து மற்றும் ஜெயின் சமூக மக்களால் கொண்டாடப்படும் வசந்த விழாவாகும்.
இன்றைய தினம் சூரியன் மற்றும் சந்திரனின் ஒளியானது மிகவும் அதிகமாக இருக்கும் “அட்சயா” என்னும் சொல் “அழியாதது” என்ற பொருளை உணர்த்துகிறது. “திருதியை” என்னும் சொல் சந்திரனின் மூன்றாம் பிறை நாளைக் குறிக்கிறது.

எனவே அட்சய திருதியை நாளில் நாம் எந்த ஒரு நல்ல காரியத்தை செய்தாலோ அல்லது தங்கம், வெள்ளி, வீடு, மனை போன்றவற்றை வாங்கினாலோ அது காலப்போக்கில் சந்திரனானது வளர்வதை போல வளருமே தவிர அழியாது என்பது ஐதீகம்.

விஷ்ணுவும், லக்‌ஷ்மியும் இன்றைய தினம் பூஜை செய்து வணங்கப்படும் தெய்வங்களாகும்.

அட்சய திருதியை கதைகள்

* இந்தப் புனித நாளில் சூரிய பகவான் பாண்டவர்களுக்கு அட்சய பாத்திரத்தை பரிசளித்ததாக மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. இப்பாத்திரம் அள்ள அள்ளக்குறையாமல் உணவை வழங்கும் பாத்திரமாகும். ஒருநாள் திரெளபதி வீட்டில் வந்திருக்கும் முனிவருக்கு உணவு வழங்கு வதற்காக கிருஷ்ண பக வானை வேண்ட அவர் நேரில் வந்து அப்பாத்திரத்தில் ஒட்டியிருந்த ஒரே ஒரு பருக்கை சாதத்தை உண்ண அப்பருக்கையால் கிருஷ்ணபகவானின் வயிறு நிரம்பியது போல உலக மக்கள் அனைவரின் வயிறும், வந்திருந்த சாதுவின் வயிறும் நிரம்பியதாக புராணக்கதை கூறுகின்றது.

* இப்புண்ணிய நாளில்தான் அன்னை துர்கா, மஹிஷாசூரனைக் கொன்றதாக புராணக்கதைகள் கூறுகின்றன. தீர்த்த மற்றும் சத்திய யுகங்கலும் அன்றைய தினத்திலேயே தொடங்கப்பட்டதாகவும் நம்பப்படுகின்றது.

* கிருஷ்ண பகவானின் குழந்தை பருவ நண்பர் சுதாமாவிற்கு அனைத்து செல்வங் களையும் அட்சய திருதியை தினத்தன்றே பகவான் வழங்கியதாகவும் நம்பப்படுகின்றது.

எனவே அட்சய திருதியை தினத்தன்று பொருள்களை வாங்குவதும் அவற்றை பரிசளிப்பதும் நம்மிடம் இருக்கும் செல்வத்தை பெருக்குமே தவிர ஒருநாலும் அழியாது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.

இன்றைய தினம் விஷ்ணுவின் அவதாரங்கள் அனைத்தும் குபேரன் மற்றும் லக்சுமியும் சிறப்பு பூஜைகள் மூலம் வணங்கப்படும் தெய்வங்களாகும்.

அட்சய திருதியை தினத்தன்று அன்னதானம் செய்யலாம். அறக்கட்டளைக்கு நிதிஉதவி செய்யலாம். எந்தவொரு தான, தர்ம செயல்களையும் செய்வதற்கு அட்சய திருதியை நாள் ஒரு துவக்கமாக அமையட்டும்.

இந்த நன்னாளில் தங்கம், வெள்ளி மற்றும் வைர, பிளாட்டின நகைகள் வாங்குவதற்கு முக்கியமான காரணம் இன்றைய தினம் வாங்கப்படும் நல்ல பொருள்கள் முடிவில்லாமல் தடையில்லாமல் மேலும் மேலும் வளர்ச்சி அடையும் அதுமட்டுமல்லாமல் வாழ்க்கை எப்பொழுதும் செழுமையாகவே இருக்கும்.

அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்வது நல்லது என்று சொல்கிறார்களே என்னென்ன தானம் செய்யலாம் என்பதை பார்ப்போம்:-

தண்ணீர், படுக்கைகள், துணிகள், குங்குமம், சந்தனம், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மோர், செருப்பு, ஷூ, குடைகள் என நம்மால் முடிந்தவற்றை இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவி நமக்கு கிடைக்கும் புண்ணியத்தை பெருக்கிக் கொள்ளலாம்.

வாகனங்கள் வாங்குவதற்கும் சிறந்த நாளாக அட்சய திருதியை நாள் கூறப்படுகின்றது. வியாபாரம் புதிதாக துவங்குவதற்கும், புதுமனை புகுவிழாவிற்கும், திருமணம் செய்வதற்கும் ஏற்ற மிகச்சிறந்த நாளாக கருதப்படுகின்றது.

இந்த ஆண்டு அட்சய திருதியை தினமும் நமக்கு அனைத்து வளங்களையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

Check Also

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது

யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து ஆவா குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நல்லூர் பகுதியில் உள்ள …