Breaking News
Home / latest-update / பிரதேச சபையில் குண்டு வைக்கப் போவதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பிரதேச சபையில் குண்டு வைக்கப் போவதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல்

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச சபையில் குண்டு வைக்கவுள்ளதாக அடையாளம் தெரியாத நபரால் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடுவில் பிரதேச சபையில் அபிவிருத்தி தொடா்பாக இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரதேச சபையின் பொதுமக்கள் தொடா்பு அலுவலகருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய சந்தேகநபர், “கூட்டம் நடைபெற்றால் சபைக்குள் குண்டு வெடிக்கும்” என அச்சுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பிரதேச சபையினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. விசேட அதிரடிப்படையினா் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருவதுடன் பிரதேச சபைக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட சந்தேகநபர் தொடா்பாக தீவிர விசாரணையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Check Also

இரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! உயிர்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, நுவரெலியா மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை …