Breaking News
Home / latest-update / கொழும்பு மருத்துவமனைக்கு இரத்தம் வழங்க விரும்புபவர்கள், யாழ் போதனா வைத்திசாலையில் வழங்கலாம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கொழும்பு மருத்துவமனைக்கு இரத்தம் வழங்க விரும்புபவர்கள், யாழ் போதனா வைத்திசாலையில் வழங்கலாம்

நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயம் அடைந்தோரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி சேகரிக்கப்படுகிறது. கொழும்பு நாரஹன்பிட்டியில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டால் உடனடியாக வழங்குவதற்கு ஏற்றவகையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தயாராகி வருகின்றது. குருதிக் கொடையாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் குருதி வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் 3 தேவாலயங்கள் மற்றும் மூன்று பிரபல ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. கிறிஸ்தவர்களின் புனிதநாளான இன்று தேவாலயங்களில் வழிபாடு நடந்த போது இந்த கொடூரம் நடந்துள்ளது.

காயம் அடைந்த 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Check Also

நள்ளிரவில் தடம் புரண்ட புகையிரதம்….தெய்வாதீனமாக உயிர் தப்பிய 250 பயணிகள்..!!

புகையிரதம் ஒன்று தடம்புரண்டதால் திருகோணமலை, மட்டக்களப்பிற்கிடையிலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு …