கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவம்! இன்று கொடியேற்றம்! ஆகஸ்ட் முதலாம் திகதி தீர்த்தம்!

July 17, 2015 12:43 am0 commentsViews: 7
katharagamaவரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஸ்ரீமுருகன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகின்றது.

வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு ஆலய முன்றலும் சுற்றாடலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாகக் காட்சி தருகின்றது. பக்தர்களும் அங்கு பெருமளவில் கூட ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய திருவிழா நிகழ்ச்சிகள் வருமாறு,

இன்று ஆரம்பமாகும் கொடியேற்ற உற்சவத்தையடுத்து எதிர்வரும் ஜூலை 28ம் திகதி தீமிதிப்பு நிகழ்வு இடம்பெறும்.

ஆகஸ்ட் முதலாம் திகதி சனிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.

தெய்வானை அம்மன் ஆலயத்திலும் சிவன் ஆலயத்திலும் ஜூலை 22ம் திகதி காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும்.

ஜுலை 31ம் திகதி தெய்வானை அம்மன் தரிசனம் இடம்பெறும்.

 

Leave a Reply


Read previous post:
தேர்தல் செயலகத்தின் கடுமையான விதிகள் உறுப்புரிமை இழக்கும் ஆபத்து

யார் ஜனாதிபதியாக இருந்தாலும் அவர்களுக்கான பாதுகாப்புக்கள் பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது முன்னை நாள் ஜனாதிபதியாகட்டும், இந்நாள் ஜனாதிபதியாகட்டும் எல்லோருக்குமே பாதுகாப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என...

Close