Breaking News
Home / latest-update / எத்தியோப்பியா விமான விபத்து எதிரொலி: போயிங் 737 விமானங்களை இயக்க மலேசியா தடை

எத்தியோப்பியா விமான விபத்து எதிரொலி: போயிங் 737 விமானங்களை இயக்க மலேசியா தடை

எத்தியோப்பியா விமான விபத்து எதிரொலி: போயிங் 737 விமானங்களை இயக்க மலேசியா தடை

எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் சமீபத்தில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்குள்ளான போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் சில நாடுகள் இந்த முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தங்களது வான்எல்லையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க மலேசியா அரசு தடை விதித்துள்ளது.
முன்னதாக, போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானத்தில் உலகில் உள்ள பல நாடுகளின் விமானச்சேவை நிறுவனங்கள் இந்த விமானங்களை வாங்க ஏராளமான அளவில் ஆர்டர் செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #EthiopianFlightCrash  #MalaysiabansBoeing737MAX8

Check Also

ஈக்வடார் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி

ஈக்வடார் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர் என்றும், 47 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் …