Breaking News
Home / latest-update / சிவார்ச்சனை செய்யும் முறை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சிவார்ச்சனை செய்யும் முறை

சிவார்ச்சனை செய்யும் முறை

தாமரை, வில்வம், சதபத்திரம், சங்குபுஷ்பம் போன்ற மலர்களில் லட்சம், கோடி மலர் கொண்டு அர்ச்சனை செய்து சிவபெருமானை வழிபட்டால் வேண்டிய வரத்தை சிவபெருமான் அருளுவார். மலர்களால் அர்ச்சனை செய்யும்போது எண்ணிக்கையை எண்ணிக் கொள்ளக் கூடாது. நிறுத்து வைத்து துதிக்க வேண்டும்.

அரச போகத்தை விரும்புவர் பத்துகோடி மலர்களால் பார்த்திப லிங்கத்தை வழிபட வேண்டும். வில்வ இலைகளை தூய சந்தனத்தில் தோய்த்து அர்ச்சிக்கலாம். தாமரை, சங்க புஷ்பங்களும் சிறந்ததே. அர்ச்சனை செய்தபின் முறைப்படி தூபம் காட்டி கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும்.

முக்தி வேண்டுபவர் ஐந்து கோடி மலர்களாலும், பிரபுக்களை வெல்ல நினைப்பவர் ஐந்து கோடி மலர்களாலும், பெருங்கல்விமானாக பன்னிரெண்டாயிரத்து ஐநூறு மலர்களாலும், ராஜபதவியை விரும்புபவன் ஐந்து கோடி மலர்களாலும், சிறையிலிருந்து விடுதலை அடைய விரும்புவன் லட்சம் மலர்களாலும், நல்ல பெண்ணை திருமணம் செய்ய விரும்புவன் இருபத்தைந்தாயிரம் மலர்களாலும், பெரும்புகழை அடைய விரும்புவன் பத்தாயிரம் மலர்களாலும், ஞானத்தை விரும்புவர் கோடி மலர்களாலும் சிவபெருமானை அர்ச்சித்து வணங்க வேண்டும்.

சிவபெருமானை பிரத்யட்சமாகக் காண விரும்புவர் ஐம்பது லட்சம் மலர்களால் அர்ச்சித்து மிருத்யுஞ்ச மந்திரத்தை ஐந்து லட்சம் முறை உச்சரிக்க வேண்டும். லட்சம் மலர்களால் அர்ச் சித்தால் தேகத் தூய்மையும் இரண்டு லட்ச மலர்களால் அர்ச்சித்தால் ஜென்மாந்திர தூய்மையும் இரண்டு லட்ச மலர்களால் அர்ச்சித்தால் ஜென்மாந்திர ஞானமும், மூன்று லட்ச மலர்களால் அர்ச்சித்தால் கர்மஞானமும் பெறலாம்.

நான்கு லட்சம் மலர்களால் சிவ பெருமானை அர்ச்சித்து வழிபட்டால் நம் கனவில் சிவபெருமான் தோன்றுவான். ஐந்து லட்சம் மலர்களால் சிவப் பிரத்யட்சமும் பத்து லட்சம் மலர்களால் அர்ச்சனை செய்தால் பலவித நன்மைகளும் கைகூடும்.

வில்வ இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்வதைவிடச் சிறந்த வழிபாடு வேறு எதுவும் இல்லை. மூன்று இலைகளைக் கொண்ட வில்வத் தளம் லட்சம் தங்கப் பூக்களுக்குச் சமமாகும். ஒரு ஜாதி மல்லிகை 5 தங்கப் பூக்களுக்கு சமமாகும்.

லட்சம் தருப்பையால் சிவபெருமானை வழிபடுபவர்கள் முக்தியை அடைவர். லட்சம் அருகம் புல்லினால் வழிபடுபவர்களுக்கு தீர்க்க ஆயுள் கிடைக்கும். லட்சம் கருவூமத்தை மலர்கள் கொண்டு வழிபாடு செய்கின்றவர்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்கும். லட்சம் அகத்தி மலர்களால் அர்ச்சித்தால் புகழும், லட்சம் துளசியால் சித்தி, முத்தியும் லட்சம் வெள்ளெருக்கு, உற்பவ, சப்பாத்தி, மாதுளை இவற்றில் ஏதேனும் ஒருவகை மலர்களால் எதிரிகள் இல்லாமல் போவதும் நிறைவேறும்.

லட்சம் கரவீர மலர்களால் அர்ச்சித்தால் தீராத நோய் தீரும். அழகிய பெண்ணை அடைய விரும்புபவன் லட்சம் மல்லிகை மலர்களால் வணங்க வேண்டும். லட்சம் மலை மல்லிமலர்கள் தானிய செல்வத்தையும், கோங்கு மலர்கள் பொருட்செல்வத்தையும், நிர்க்குண்டி மலர்கள் மன அமைதியையும் தரும்.
செண்பகம், தாழை மலர்களைத் தவிர ஏனைய மலர்களும் சிவபெருமானுக்கு உகந்ததே.

முனை முறிந்து போகாத வெள்ளை அரிசியை நிவேதனம் செய்தால் செல்வம் எல்லாம் கிடைக்கும். வில்வப் பழம் நிவேதனமாக வைத்து ஆராதனை செய்தால் சகல செல்வங்களும் சேரும். இருபது வேதியர்களுக்கு அன்னமிட்டு ருத்ர காயத்திரியை நூற்றியெட்டு முறை உச்சரிக்க வேண்டும். எள் அட்சதை பதினொரு பலம் சமர்ப்பிக்க சொர்க்க பதவி கிட்டும்.

துவரை இலையை குங்குமம் கலந்த சந்தனத்தில் தோய்த்து பூஜை செய்தால் பற்பல நன்மைகள் கிடைக்கும். சிவலிங்க மூர்த்திக்கு ஜலதாரை அபிஷேகம் செய்தால் நோய்கள் தீரும். நெய் தாரை செய்தால் வம்சவிருத்தி உண்டாகும்.

எதிரிகளால் உண்டாகும் தொல்லைகளிலிருந்து விடுபட பத்தாயிரம் மந்திர உச்சாடனம் செய்யும் காலத்திற்கு சர்க்கரை கலந்த பாலை தாரா பாத்திரத்தில் இட்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். தேன் தாரை பலவித நோய்களைப் போக்கும். கருப்பஞ்சாற்று தாரை சகல துக்கங்களையும், தூய நீர்த்தாரை மோட்சப் பலன்களும் தரும்.

Check Also

விஸ்பரூபமெடுக்கும் வைத்தியர் சியாப்தீன் விவகாரம்! சுகாதார அமைச்சு நடவடிக்கை

சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சினால் விசேட விசாரணை …