Breaking News
Home / latest-update / தீக்கிரையாக்கப்பட்டுள்ள யாழ். கொக்குவில் இந்து கல்லூரியின் விளையாட்டறை

தீக்கிரையாக்கப்பட்டுள்ள யாழ். கொக்குவில் இந்து கல்லூரியின் விளையாட்டறை

யாழ். கொக்குவில் இந்து கல்லூரியின் விளையாட்டறை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த விளையாட்டறையானது நேற்றிரவு அடையாளந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறையானது பாடசாலை மாணவரால் அல்லது ஆசிரியரால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

Check Also

ஈக்வடார் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி

ஈக்வடார் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர் என்றும், 47 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் …