Breaking News
Home / latest-update / இலங்கைப் பழ வகைகளுக்கு சர்வதேச அளவில் ஏற்பட்ட கிராக்கி…!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இலங்கைப் பழ வகைகளுக்கு சர்வதேச அளவில் ஏற்பட்ட கிராக்கி…!!

இலங்கையின் பழ வகைகளுக்கு வெளிநாடுகளில் கேள்வி நிலவுகின்ற போதிலும் உரிய விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பழ மற்றும் மரக்கறி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுரேஸ் ஹசீம் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் இலங்கையின் மொரிஸ் ரக அன்னாசிகளுக்கு சிறந்த கேள்வி நிலவுகிறது. எனினும், விநியோக நடவடிக்கைகளை உரிய வகையில் மேற்கொள்ள முடியாதுள்ளது.

தேவையான அளவு அன்னாசி செய்கை மேற்கொள்ளப்படாமையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சிறிய அளவில் செய்கைகளை மேற்கொள்ளாது பாரிய அளவில் செய்கைகளை மேற்கொள்ளும் போது குறைந்த செலவில் கூடுதல் லாபத்தை பெறுவதோடு, விநியோக செயற்பாடுகளையும் உரிய வகையில் மேற்கொள்ள முடியும் என இலங்கை பழ மற்றும் மரக்கறி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுரேஸ் ஹசீம் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி

கேரளாவை சேர்ந்த திருமணமான இளம் பெண் பேஸ்புக் நண்பருடன் ஓட்டம் பிடித்த நிலையில் அவரால் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். கொல்லத்தை …