Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (17-02-2019)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (17-02-2019)

மேஷம்
பிப்ரவரி 17, 2019

இன்று உங்கள் மனநிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். எதிர்பாராத செலவினங்கள் சிரமம் தரும். போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவை. செய்யும் தொழிலில் பாராட்டு, கவுரவம் மிகுந்திருக்கும்.

ரிஷபம்
பிப்ரவரி 17, 2019

இன்று உங்களுக்கு பொழுது போக்கு அம்சங்கள் மன நிறைவு தரும். நினைத்த காரியம் உடன் செய்து முடிப்பீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனுகூலம் பெறும். உறவுகள் மேம்படும்.

மிதுனம்
பிப்ரவரி 17, 2019

இன்று நீங்கள் செய்யும் தொழிலில் பாராட்டு, கவுரவம் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரணை உண்டு. குடும்பத்தில் முன்கோபம் காரணமாக பிரச்னைகள் வரும். தவிர்ப்பது நலம். அடுத்தவரின் நலனுக்காக இன்று நீங்கள் சிரமம் மேற்கொள்வீர்கள்.

கடகம்
பிப்ரவரி 17, 2019

இன்று நீங்கள் யாருக்கேனும் கட்டுப்படும் சூழ்நிலை வரும். வீண் பயத்தை தவிர்ப்பது உத்தமம். பக்தி பெருக்கு இறையருள் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும்.

சிம்மம்
பிப்ரவரி 17, 2019

இன்று உங்களுக்கு தேவையற்ற விஷயத்தில் பய உணர்வு வரும். மனக்குழப்பம் காரியத்தடையாகும். வரவுக்கு ஏற்ப செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகளில் வாக்குவாதம் வரும். சூழ்நிலையை அனுசரிப்பது உத்தமம்.

கன்னி
பிப்ரவரி 17, 2019

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நினைத்த காரியம் கைகூடும். நல்விருந்து என நற்பலன்கள் இருக்கும். உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். உறவுகள் மேம்படும்.

துலாம்
பிப்ரவரி 17, 2019

இன்று குடும்ப விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். நீங்கள் திட்டமிட்ட விஷயங்கள் இன்று கைகூடும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவைப்படும். தேக ஆரோக்கியம் முன்னேற்றம் பெறும்.

விருச்சிகம்
பிப்ரவரி 17, 2019

இன்று உங்கள் தேக ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்னை சிரமம் தரும். உங்கள் முயற்சிகளில் காரியத்தடை வரும். பணவரவுகள் சுபிட்சமாக இருக்கும். விரோதிகளை வெல்லும் வல்லமை கிட்டும். ஆன்மிக ஈடுபாடு இறையருள் தரும்.

தனுசு
பிப்ரவரி 17, 2019

இன்று உங்களுக்கு தண்ணீரினால் பிரச்னை வரும். முன்னெச்சரிக்கை தேவை. சுகபோஜனம் திருப்திகரமாக இருக்கும். உங்கள் புத்திசாலித்தனமான செயல்பாடு செய்யும் தொழிலில் முன்னேற்றம் தரும். நீங்கள் நினைத்த காரியம் கைகூடும்.

மகரம்
பிப்ரவரி 17, 2019

இன்று உங்களுக்கு ஞாபகமறதி தொல்லை அதிகமிருக்கும். தொழில் ரீதியான சூழ்நிலையில் கடின உழைப்பு இருக்கும். எதிரிகள் தொல்லை இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கும்பம்
பிப்ரவரி 17, 2019

இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் ஏற்றமாக இருக்கும். வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். சுயமரியாதைக்கு கவுரவக் குறைச்சல் ஏற்படும். மனசஞ்சலம் வரும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

மீனம்
பிப்ரவரி 17, 2019

இன்று உங்களுக்கு சுகபோகம் மிகுந்திருக்கும். பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பிரயாண அலைச்சல் இருக்கும். சுகமான நித்திரை இருக்கும். அக்கம்பக்கத்தில் கவனம் தேவை. ஆன்மிக சிந்தனை உங்களுக்கு இறையருள் தரும்.

Check Also

அமெரிக்காவில் சூறாவளி புயல்-வெள்ளம்: 2 பேர் பலி

அமெரிக்காவில் ஒக்லகோமா மாகாணத்தில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. நள்ளிரவில் கடுமையாக காற்று வீசியது. அப்போது மழையும் கொட்டியது. …