Breaking News
Home / latest-update / காதலர் தின ஸ்பெஷல்.. உங்கள் காதலியை மயக்கும் அழகிய கவிதைகள்…
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

காதலர் தின ஸ்பெஷல்.. உங்கள் காதலியை மயக்கும் அழகிய கவிதைகள்…

உலகத்தில் உள்ள அனைத்து காதலர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் உலக காதலர்கள் தினம் நெருங்கி விட்டது. காதலை சொல்ல தயங்கி கொண்டிருந்தவர்கள், காதலை ஏற்பதற்கு தயங்கி கொண்டிருந்தவர்கள், காதலித்து கொண்டிருப்பவர்கள் ஏன் திருணம் ஆனவர்கள் கூட காதலர் தினத்தன்று தன் அன்பை வெளிப்படுத்தும் நாளாக காதலர் தினம் இருக்கிறது. இந்த நொடி வரை உலகம் அழிவின்றி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்க காதல்தான் அடிப்படையாக இருக்கிறது. காதலின்றி வாழவும் முடியாது, காதலிக்காமல் வாழவும் முடியாது என்பதே உண்மை. காதல் எந்த வடிவில் இருந்தாலும் அழகுதான், அவசியம்தான்.

” பிறரை நேசிக்காத வாழ்வும் ஒரு வாழ்வோ” என்று கூறுவார்கள், அதன்படி அன்புதான் நம் வாழ்க்கையை வழிநடத்தி செல்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. காதலை ஒரு நாளிற்குள் அடைக்கவும் முடியாது, கொண்டாடி தீர்க்கவும் முடியாது. ஏனெனில் அது ஆயுள் முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு அற்புதமாகும். உங்கள் மனதில் காதல் இருக்கும்வரை தான் நீங்கள் மனிதனாக இருக்கமுடியும். ஆண்டு முழுவதும் காதலை கொண்டாடி தீர்த்தாலும் காதலர் தினத்தன்று சற்று கூடுதலாக கொண்டாட வேண்டும். இந்த வருட காதலர் தினத்தை இந்த கவிதைகளுடன் கொண்டாட தயாராகுங்கள்.

கவிதை 1

” உன் இதயத்திற்கு கற்றுத்தந்தது போல உன் விழிகளுக்கும் கற்றுக்கொடு கண்மணியே காதலை மறைக்க… சகியே.. உன் கண்களே சொல்கிறதடி என் மீதான உன் காதலை… ”

கவிதை 2

” நான் சொல்வேன் என நீயும் நீ சொல்வாய் என நானும் நினைத்தே யுகங்களென நாட்களை கடத்தியது போதும்…! கண்மணியே…! நானே சொல்லிவிடுகிறேன் நம் காதலை முன்மொழியத்தான் மறுத்துவிட்டாய் வழிமொழிந்தாவது விடு…! ”

கவிதை 3

” நீ எனக்கு தரும் முத்தங்களை திருடி வெறும் சத்தங்களை தரும் உன் அலைபேசி என் அனுமதியின்றி உன்னை தீண்டும் மழைத்துளி தங்கமுன்னை நான் சுமக்க தவமிருக்கும் போது உன் அங்கம் சுமக்கும் உன் SCOOTY என உன்னை தீண்டும் அனைத்தின் மீதும் தீராத கோபம்தான் எனக்கு…! ”

கவிதை 4

” ஒரே ஒரு முறை உன்னை காதலில் ஜெயிக்க அனுமதி கொடு கண்ணே…! காலம் முழுவதும் தோற்றுகொண்டே இருப்பேன் உன்னிடம் கணவனாக…!

கவிதை 5

” எனது உலகம் எவ்வளவு சிறியது பார்த்தாயா? உன்னில் தொடங்கி, உன்னுள்ளயே முடிந்து விடுகிறது…!

Check Also

வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி

கேரளாவை சேர்ந்த திருமணமான இளம் பெண் பேஸ்புக் நண்பருடன் ஓட்டம் பிடித்த நிலையில் அவரால் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். கொல்லத்தை …