Breaking News
Home / latest-update / வெளிநாட்டில் இருந்து வந்த நபரை சரமாரியாக வெட்டிய 12பேர் கொண்ட கும்பல்

வெளிநாட்டில் இருந்து வந்த நபரை சரமாரியாக வெட்டிய 12பேர் கொண்ட கும்பல்

யாழ். வரணியில் கோவில் பிரச்சினை ஒன்றில் தலையிட்டமை காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நபர் ஒருவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து இலங்கை வந்துள்ள 48 வயதான வேதராணியம் ஜெகதீசன் என்பவரே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

12 பேர் கொண்ட குழுவொன்று இவரை வாளால் வெட்டிவிட்டு அதனை தடுக்க முற்பட்ட வயோதிப தாயையும் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த தாக்குதல் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் ஏவலில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தாக்குதலுக்கு உள்ளான நபர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ள நிலையில் ஊரில் உள்ள கோயில் ஒன்றின் பிரச்சினையில் தலையிட்டுள்ளார்.

அதன்போது வெளிநாட்டில் வசிக்கும் நபரொருவர், குறித்த நபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோயில் பிரச்சினை தொடர்பில் வாக்கு வாதப்பட்டதுடன் , கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே, நேற்றைய தினம் இவர் வாள்வெட்டுக்கு உள்ளாகியுள்ளார், அதையடுத்து வாள் வெட்டுக்கு இலக்கான நபர் அங்கிருந்து மீட்கப்பட்டு வரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸ் விசாரணையின் போது தாக்குதலுக்கு இலக்கானவர் வாக்குமூலம் அளிக்கையில்,

தான் கோயில் பிரச்சினையில் தலையிட்டமை தொடர்பில், வெளிநாட்டில் இருந்து ஒருவர் தன்னை தொலைபேசியில் மிரட்டியதாகவும் , அவரே இங்கே கூலிக்கு வாள் வெட்டுக்குழுவை அமர்த்தி தன் மீது தாக்குதல் மேற்கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Check Also

கொழும்பு மருத்துவமனைக்கு இரத்தம் வழங்க விரும்புபவர்கள், யாழ் போதனா வைத்திசாலையில் வழங்கலாம்

நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயம் அடைந்தோரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி சேகரிக்கப்படுகிறது. கொழும்பு நாரஹன்பிட்டியில் …