Breaking News
Home / latest-update / உலகக் கிண்ண அணியில் ஸ்மித், வார்னர் இல்லையென்றால், அது பைத்தியக்காரத்தனம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

உலகக் கிண்ண அணியில் ஸ்மித், வார்னர் இல்லையென்றால், அது பைத்தியக்காரத்தனம்

ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடைக்காலம் மார்ச் மாதம் 29 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதனால் இருவரும் அவுஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ணத்திற்கான அந்த அணியில் வார்னர் இடம்பெற வாய்ப்புள்ளது. ஸ்மித் ஆஷஸ் தொடரில்தான் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணிக்கு ஸ்மித், வார்னரை தேர்வு செய்யவில்லை எனில், அது பைத்தியக்காரத்தனமானதாக இருக்கும் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் “இருவரும் அணிக்கு திரும்பும் முன் சில போட்டிகளில் விளையாடுவது அவசியம். இது எல்லாம் நிர்வாகத்தின் ஒரு பகுதி. நாம் சற்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர்களுக்கு இது கடினமான நேரம் என்பது எங்களுக்குத் தெரியும். அணிக்கும் கடினமான நேரம்தான். கடந்த 9 அல்லது 10 மாதங்களாக ஒருங்கிணைந்து சென்று கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

தற்போதும், வரும் காலத்திலும் அவர்கள் எவ்வளவு கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களும் வாய்ப்பை தேடுவார்கள், நாங்களும் (அவுஸ்திரேலியா) வாய்ப்பை தேடுவோம்.

நாம் இரண்டு சிறந்த வீரர்களை பற்றி பேசி வருகிறோம். நாம் உண்மையிலேயே இரண்டு சிறந்த வீரர்களை பற்றி பேசவில்லை. அவர்களை நாங்கள் உலகக் கிண்ணத்திற்கான அணியில் சேர்க்கவில்லை என்றால், அது பைத்தியக்காரத்தனமாகும்” என்றார்.

Check Also

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து

ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #SterliteCase #SterliteIssue #SupremeCourt …