Breaking News
Home / latest-update / பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிருக்குப் போராடிய பசு மாடு இளைஞர்களால் மீட்பு…!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிருக்குப் போராடிய பசு மாடு இளைஞர்களால் மீட்பு…!

பாதுகாப்பற்ற பாழடைந்த கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிருக்குப் போரடிக் கொண்டிருந்த பசுமாட்டை அந்தப் பகுதி இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதான சந்திக்கு அண்மையிலுள்ள பகுதியில் பாதுகாப்பற்ற பாழடைந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி வீழ்ந்துள்ளது.வெளியே வருவதற்கு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் பசுவால் வெளியே வரமுடியவில்லை இதையடுத்து அப்பகுதி மக்கள் பிரதேச சபையினருக்கு தகவல் வழங்கினர்.எனினும், பிரதேச சபையினர் குறித்த நேரத்துக்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் உரிய முறையில் செயற்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பசு மாட்டினை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

Check Also

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து

ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #SterliteCase #SterliteIssue #SupremeCourt …