Breaking News
Home / latest-update / இந்த காதலர் தினத்தில் எந்த ராசிக்காரர்கள் காதலை சொன்னால் பலிக்கும்… யாருக்கு தோல்வி?

இந்த காதலர் தினத்தில் எந்த ராசிக்காரர்கள் காதலை சொன்னால் பலிக்கும்… யாருக்கு தோல்வி?

பிப்ரவரி மாதம் தொடங்கிவிட்டது. பிப்ரவரி என்றாலே காதல் மாதம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் எல்லா காதலர்களுக்கு இது நல்ல மாதமாகவோ அல்லது எல்லோருக்கும் காதலர் தினத்தன்று காதலை சொன்னால் அது நிறைவேறுவதில்லை. அப்படி இந்த வருடம் காதல் தமாதமான பிப்ரவரியில் எந்தெந்த ராசிக்காரர்கள் காதல் சொன்னால் அது நிறைவேறும் என்று பார்க்கலாம்.

மேஷம் நீங்கள் எந்த காரியத்தைச் செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி வைத்தீர்களோ அதை மிகச்சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். நீதிமன்றம், வழக்குகள், பஞ்சாயத்துகள் போன்ற விஷயங்களில் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். முடிந்தால் விலகியிருப்பது தான் நல்லது. அதேபோல் வெளியிடங்களில் மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ளவர்களிடம் அனுசரித்துப் போவது நல்லது. சுய தொழில் செய்கின்றவர்கள் வாடிக்கையாளர்களின் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வதால் பெரும் லாபத்தை ஈட்டுவீர்கள். போட்டிகள் ஏதேனும் வந்தால் யோசிக்காமல் கலந்து கொள்ளுங்கள் நிச்சயம் வெற்றி உங்களுக்குத் தான். உங்களுடைய திறமைக்கு ஏற்ப அங்கீகாரமும் மதிப்பும் உயரும். பயணங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தந்தைவழி உறவினர்களின் மூலம் தொழிலுக்கு ஆதரவுகள் பெருகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குக் கூடுதல் பொறுப்புகளும் சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பும் கிடைக்கும். மனைவியின் வழியில் உங்களுக்கு சாதகமாக சில விஷயங்கள் நடக்கும். தேவையற்ற எண்ணங்கள் மனதில் சின்ன சின்ன குழப்பங்கள் வந்து போகும். கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் தெளிவாக மனநிலையோடு இருங்கள்.

ரிஷபம் உங்களுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். அந்த வேலையும் உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். நீங்கள் திட்டமிடும் வேலைகள் யாவும் இழுபறியாகவே இருக்கும். கடைசி நேரத்தில் தான் நடந்து முடியும். பிரபலமான ஆட்களுடைய நட்பைப் பெறுவீர்கள். அது உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும். வீட்டில் இருந்து வந்த பொருளாதாரச் சிக்கல்கள் தீரும். செய்கின்ற காரியங்களில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர்களின் உறவுகளின் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். உயர்கல்வித் துறையில் இருக்கும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதல்கள் கிடைக்கும். மனதில் புதுவித உத்வேகத்தையும் புத்துணர்வையும் கொடுக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது. நீங்கள் எதிர்பார பண வரவுகளினால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். மனைவியின் விருப்பங்களை அறிந்து நடந்து கொள்ள வேண்டும். நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, குதூகலமாக இருப்பீர்கள்.

மிதுனம் உங்களுடைய மனதுக்குள் புதுப்புது எண்ணங்களும் சிந்தனைகளும் உண்டாகும். உங்களுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்ட புதிய இலக்குகளை நிர்ணயிக்க அதற்கான செயல் திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். உங்களுடைய புதிய புதிய முயற்சிகளால் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படுகிற வாய்ப்புகள் உண்டாகும். பெரியவர்களின் சொல்படி கேட்டு நடந்தீர்கள் என்றால் உங்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். மனதுக்குப் பிடித்தமானவர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து உங்களுக்கு சுமூகமான சூழல்கள் ஏற்படும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களால் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உண்டாகும். நண்பர்களுடன் ஜாலியாகப் பேசுகின்ற போது, கொஞ்சம் கவனமாக இருங்கள். ஆன்மீகம் சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். மனைவியின் வழிவந்த உறவினர்களால் உங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் உங்களுக்கு சின்ன அலைச்சலுக்குப் பிறகு தான் கிடைக்கும். மனதுக்குள் ஏற்படுகின்ற தேவையற்ற குழப்பங்களால் வேலையில் சில தடங்கல்களும் தாமதங்களும் உண்டாகும்.

கடகம் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். வீட்டில் உள்ள குழந்தைகள் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து போகும். முக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுடைய முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கூடி வரும். நண்பர்கள் மூலமாக உங்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட உதவிகள் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும். வியாபாரங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு புதிய ஆட்களுடைய அறிமுகங்கள் மற்றும் ஆலோசனைகளால் பெரும் லாபம் உண்டாகும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இதுவரை அரசாங்கப் பணிகள் மந்தமாக இருந்த நிலை மாறி வேகமாக நடைபெற ஆரம்பிக்கும். நீங்கள் கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி தொழிலில் முன்னேற்றத்தையும் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். லஸ்யா புற்று நோயை வெல்லலாம்! உங்கள் உதவி இருந்தால்.. லஸ்யா புற்று நோயை வெல்லலாம்! உங்கள் உதவி இருந்தால்.. உங்கள் உதவி இல்லாவிட்டால் இந்த சிறுமியின் நிலை மோசமாகி விடும்

சிம்மம் உங்களுடைய திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் உங்களுக்குச் சதகமான பலன்களைத் தரும். எதிர் பாலினத்தவர்களால் உங்களுக்கு அனுகூலமான பலன்களே கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களின் மூலமாக உங்களுக்கு ஆதரவு சூழல்கள் பெருக ஆரம்பிக்கும். நீங்கள் செய்யும் புதிய முயற்சிகளில் நீங்களே எதிர்பார்க்காத சில நல்ல காரியங்க்ள நிறைவேறும். புதிதாக வீடு அல்லது மனைகள் வாங்க திட்டமி தீட்டுவீர்கள். பெற்றோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகுள் நீங்கி, அன்பும் நெருக்கமும் அதிகமாகும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். பணியில் நீங்கள் எதிர்பார்த்த இடத்துக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும். வர்த்தகங்கள் தொடர்பான செயல்பாடுகளினால் நல்ல முன்னேற்றமான சூழல் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது தான் நல்லது.

கன்னி இதுவரை உங்கள் மனதைப் போட்டு அறுத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் இருந்து தெளிவு பிறக்கும். போட்டித் தேர்வுகளில் உங்களுக்குச் சாகதான பலன்கள் உண்டாகும். கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுங்கள். உங்களுடைய உறவினர்களின் ஆதரவினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுயைட புது முயற்சிகளில் கொஞ்சம் நிதானம் காட்டுங்கள். மற்றவர்குளுடைய விஷயங்களில் மூக்கை நுழப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனைவியின் உறவினர்கள் வழியில் ஆதாயங்கள் உண்டாகும். வர்த்தகத் துறையில் உள்ளவர்கள் லாபம் அடைவார்கள். உடன் பிறந்த சகோதரரிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய உத்தியோகத்தில் உங்களுடைய திறமைக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் மனதுக்குள் நீங்கள் திட்டமிட்ட செயல்களை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சம்பந்தப்பட்ட புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதை நோக்கிப் பயணிப்பீர்கள். உடலை வலுவாக வைத்திருக்க முடிவு செய்வீர்கள். புதிதாக ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். மனதுக்கு விருப்பமாகவர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவதற்கான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் உங்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். பயணங்களால் புதுவித அனுபவங்கள் பிறக்கும். அடுத்தவர்களுக்கு உதவுவதற்கு முன்னால் கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள். வீடு மனை விவகாரங்களில் நல்ல லாபம் உண்டாகும். உங்களிடம் வேலை செய்கின்ற வேலையாட்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு நன்மையைத் தரும்.

விருச்சிகம் நீங்கள் திட்டமிட்ட காரியங்களில் வேகமாக செயல்படுவதை விட விவேகத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். தொழில் ரீதியான எதிர்ப்புகள் குறைந்து வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்த எதிரிகளை கண்டறிந்து களைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட சின்ன சின்ன முயற்சிகளில் தடைகள் உண்டாகும். ஆனாலும் நீங்கள் எதிர்பாராத தனவரவு உங்களுக்குக் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும்.

தனுசு வெளியூருக்குச் செல்வதற்குத் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். வாழ்க்கைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த பொருள்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். உங்களுடைய உத்தியோகத்தில் புதிதாக எடுக்கும் முயற்சிகளின் மூலம் புதுப்புது எண்ணங்களும் சிந்தனைகளும் அதிகமாகும். மாணவர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்தைக் குறைத்து கல்வியில் ஆர்வம் செலுத்துங்கள். வீட்டில் குழந்தைகளின் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். பரம்பரை சம்பந்தமான செயல்களில் சில விரயச் செலவுகள் உண்டாகும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். உங்களுடைய உத்தியோகத்தில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும்.

மகரம் உங்களுக்குத் தொழிலில் புகழும் வெற்றியும் உண்டாகும். புனித யாத்திரைகள் மேற்கொள்வதற்கான வாய்பபுகள் உங்களுக்குக் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். இதுவரை வசூலாகாமல் இருந்த பணம் முழுமையாக கைக்கு வந்து சேரும். வீட்டில் குழந்தைகளின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். உடன் பிறந்தவர்குளால் சாதகமான சூழல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து அதை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கும்பம் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கிற உங்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சியானதாகவே இருக்கும். நீங்கள் திட்டமிட்ட செயல்களில் வேகம் அதிகரிக்கும். விளையாட்டு வீரர்களுக்கு உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பரம்பரை சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வுகள் கிடைக்கும். உங்களுடைய நீண்ட கால எண்ணங்களை நிறைவேற்றுவதில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். மனதுக்கு விருப்பமானவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். திருமண முயற்சிகள் உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும். வெளியாட்களுடைய அறிமுகத்தால் உங்களுக்கு பொருளாதார மேன்மை உ்ணடாகும். வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான சாதகமான சூழல்கள் உண்டாகும்.

மீனம் எந்த விஷயமாக இருந்தாலும் உங்களுடைய கனிவாக வாதத்தால் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய பெற்றோர்களின் ஆதரவினால் தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். தொழிலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் உங்களுடைய நேர்மைக்காக வாடிக்கையாளர்களின் நற்பெயரைப் பெறுவீர்கள். வேழக்கு விவாதங்களில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். வெளியிடப் பணியிடங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

Check Also

கொழும்பு மருத்துவமனைக்கு இரத்தம் வழங்க விரும்புபவர்கள், யாழ் போதனா வைத்திசாலையில் வழங்கலாம்

நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயம் அடைந்தோரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி சேகரிக்கப்படுகிறது. கொழும்பு நாரஹன்பிட்டியில் …