Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (03-02-2019)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (03-02-2019)

மேஷம்
பிப்ரவரி 03, 2019

இன்று உங்களுக்கு பொருளாதார சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். மேலதிகாரிகளின் அனுசரணை இருக்கும். தேவையற்ற விஷயங்களில் மனக்குழப்பம் வரும்.

ரிஷபம்
பிப்ரவரி 03, 2019

இன்று உங்களுக்கு பணவரவுகள் பிரச்னைகள் தீரும் வகையில் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். செய்யும் தொழிலில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். எதிர்ப்புகள் விலகும்.

மிதுனம்
பிப்ரவரி 03, 2019

இன்று உங்கள் குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். எதிர்பாராத செலவினங்கள் வரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். உறவுகள் நண்பர்கள் உதவி ஒத்தாசை பயனுள்ளதாக இருக்கும்.

கடகம்
பிப்ரவரி 03, 2019

இன்று பொருளாதார சூழ்நிலைகள் திருப்திகரமாக இருக்கும். சவாலான பணிகளை சாதுார்யமாக செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பயண அலைச்சல் சிரமம் தரும். கொடுக்கல் வாங்கலில் முன்னெச்சரிக்கை அவசியம் தேவை.

சிம்மம்
பிப்ரவரி 03, 2019

இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் சுமாராகவே இருக்கும். எதிர்பாராத செலவினங்கள் சிரமம் தரும். குடும்பத்தேவைகள் அதிகரிகக்கும். கடன் வாங்கி சமாளிப்பீர்கள். தொழில் ரீதியான சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும்.

கன்னி
பிப்ரவரி 03, 2019

இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் தாராளமாக இருக்கும். புதிய பொருள் சேர்க்கை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுகபோஜனம், சுகஜீவனம் மகிழ்ச்சி தரும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் கைகூடும்.

துலாம்
பிப்ரவரி 03, 2019

இன்று எதிர்பாராத நன்மைகள் மகிழ்ச்சி தரும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். திட்டமிட்டபடி செயல்படுவீர்கள். கடன் சுமைகள் குறையும். தேக ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லை வரும். முன்கோபம், வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம்.

விருச்சிகம்
பிப்ரவரி 03, 2019

இன்று உங்கள் புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உறவினர், நண்பர்கள் உதவி, ஒத்தாசை இருக்கும். குழந்தை பராமரிப்பு சிரமங்கள் இருக்கும். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். இறையருள் நன்மை பயக்கும்.

தனுசு
பிப்ரவரி 03, 2019

இன்று உங்களுக்கு அயனசயனபோகம் மிகுந்திருக்கும். கண் உபாதை சிரமம் தரும். குடும்பத்தினர் அனுசரணையான போக்கு மகிழ்ச்சி தரும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும். நண்பர்கள் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.

மகரம்
பிப்ரவரி 03, 2019

இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலை வரவுக்கு ஏற்ப செலவு இருக்கும். ரிப்பேர் செலவினங்கள் சிரமம் தரும்.விருந்தினர் வருகை குடும்ப மகிழ்ச்சி பெருகும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும்.

கும்பம்
பிப்ரவரி 03, 2019

இன்று நீங்கள் நினைத்தது நடக்கும். வியாபாரம் மற்றும் தொழில் சார்ந்த விஷயம் லாபகரமாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் வரும். முன்னெச்சரிக்கை தேவை. எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையில் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள்.

மீனம்
பிப்ரவரி 03, 2019

இன்று குழந்தைகளால் குடும்ப மகிழ்ச்சி பெருகும். ஆடம்பரச்செலவினங்கள் இருக்கும். சிக்கன செயல்பாடு இருந்தால் சிரமம் குறையும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை.

Check Also

வீடியோ: சரளமாக தெலுங்கு பேசி இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்க வாலிபர்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் இசாக் ரிக்சார்ட். இவர் அமெரிக்காவில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் பணிபுரிகிறார். சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் …