Breaking News
Home / latest-update / யாழ் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு…! மீண்டும் பாஸ் நடைமுறை அமுலுக்கு…..!!

யாழ் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு…! மீண்டும் பாஸ் நடைமுறை அமுலுக்கு…..!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாஸ் நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிட இருவர் மட்டுமே அனுமதிப்பதற்காகவே குறித்த பாஸ் நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளது.குறித்த பாஸ் நடைமுறையானது தாதியர்கள் மற்றும் நோயாளர்களின் கருத்துக்களுக்கு இணங்க எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.மேலும் இவ்விடயம் குறித்து வைத்தியசாலை பணிப்பாளர் கருத்து  வெளியிடும் போது ;

போதனா வைத்தியசாலையில் 1250 இற்கும் மேற்பட்ட கட்டில்கள் உள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை மூன்று வேளைகளிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுகின்றனர்.கடந்த சில வருடங்களாக ஒரு நோயாளர்களை பார்வையிட அதிகமானவர்கள் வருகை தருகின்றனர். இதன் காரணமாக நோயாளர்களுக்கு முறையாக சிகிச்சை அளிப்பதற்கு வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்ஒரு நோயாளரைப் பார்வையிட அதிகமான பார்வையாளர்கள் வந்து அந்த நோயாளரை சுற்றி நிற்கும் போது, அருகில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்த விடயங்களை வைத்தியசாலை நிர்வாகம் மிகவும் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்ததன் அடிப்படையில் ஒரு நோயாளியைப் பார்க்க நோயாளிக்கு அருகில் இருவர் மாத்திரமே செல்ல முடியும்.பலர் வைத்தியசாலைக்கு வருகை தந்தாலும், அவர்கள் வைத்தியசாலையின் ஒரு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து, நோயாளியைப் பார்க்கச் சென்றவர் வந்ததன் பின்னர், இருவராக சென்று பார்வையிட முடியும்.

வைத்தியசாலை நிர்வாகத்தினரால் வழங்கப்படும் பாஸை பார்வையாளர்கள் கொண்டு சென்று இருவராக பார்வையிடுமாறும் அவ்வாறு பார்வையிடுவதனால் நோயாளர்களுக்கு ஏற்படும் கிருமித் தொற்றுக்கள் மற்றும் காற்றோட்டத்தை வழங்க முடியும்.வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் நோயாளிக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

எனவே, பாஸ் நடைமுறையைப் பின்பற்றி நோயாளிக்கு தகுந்த சிகிச்சை அளிக்க ஒத்துழைப்பு வழங்குமாறும், பொது மக்களிடம் வைத்தியசாலைப் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Check Also

கொழும்பு மருத்துவமனைக்கு இரத்தம் வழங்க விரும்புபவர்கள், யாழ் போதனா வைத்திசாலையில் வழங்கலாம்

நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயம் அடைந்தோரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி சேகரிக்கப்படுகிறது. கொழும்பு நாரஹன்பிட்டியில் …