Breaking News
Home / latest-update / புதிய வடிவமைப்பில் அசத்தும் ட்விட்டர்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

புதிய வடிவமைப்பில் அசத்தும் ட்விட்டர்

ட்விட்டர் வெப் பயனர்களுக்கு புதிய இன்டர்ஃபேஸ் வழங்கும் பணிகள் நடைபெறுகிறது. ட்விட்டரில் புதிய வடிவமைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
புதிய வடிவமைப்பை விரும்பும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளவோ அல்லது முந்தைய வடிவமைப்பிலேயே தொடரலாம். புதிய இன்டர்ஃபேசை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ‘opt-in’ ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். புதிய வடிவமைப்பில் இரண்டு அல்லது மூன்றடுக்குகளை கொண்டிருக்கிறது.
இத்துடன் எமோஜி பட்”ன், க்விக் கீபோர்டு ஷார்ட்கட்கள், மேம்படுத்தப்பட்ட டிரெண்ட்கள், அட்வான்ஸ்டு சர்ச் மற்றும் பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய இன்டர்ஃபேஸ் பயன்படுத்த விரும்பாத பட்சத்தில் வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பழைய இன்டர்ஃபேசிற்கு மாற்றிக் கொள்ளலாம்.

Check Also

வீடியோ: சரளமாக தெலுங்கு பேசி இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்க வாலிபர்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் இசாக் ரிக்சார்ட். இவர் அமெரிக்காவில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் பணிபுரிகிறார். சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் …