Breaking News
Home / latest-update / 15 கிலோ எடை கொண்ட வெடிபொருள் மீட்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

15 கிலோ எடை கொண்ட வெடிபொருள் மீட்பு

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தியில் அபாயாகரமான வெடிபொருள் ஒன்று நேற்று (09) மீட்க்கப்பட்டுள்ளது.

தனியார் காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிரடிப் படையினரால் மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த காணி உரிமையாளர் பழ மரக் கன்று ஒன்றை நடுவதற்காக வீட்டின் பின்புறப் பக்கம் குழி தோண்டியுள்ளார். இதன்போது மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு ஒன்று இருந்ததை கண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொக்குத்தொடுவாய் கிராம சேவையாளர் ஊடாக பொலிஸாருக்கு காணி உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் நன்பகல் குறித்த பகுதிக்கு பொலிஸாருடன் சென்ற அதிரடிப்படையினர் அபாயகரமான வெடிகுண்டை மீட்டுள்ளனர்.

1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொக்குத்தொடுவாய் பிரதேசம் கொண்டுவரப்பட்ட போது அந்தப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

27 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது சொந்த ஊரில் (2011 ஆம் ஆண்டு ) பொதுமக்கள் மீள்குடியேறியபோது பதுகாப்பான பிரதேசம் என இந்தப்பகுதி அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் 15 கிலோ எடை கொண்ட வெடிபொருள் ஒன்று கொக்குத்தொடுவாய் மத்தியில் மீட்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு அச்சமடைந்துள்ள மக்கள் தமது பகுதியை மீள வெடிபொருள் அகற்றும் நடவடிக்கைக்கு உட்ப்படுத்துமாறு கோரியுள்ளனர்.

Check Also

நாடு முழுவதும் அடைமழை! நீரில் மூழ்கிய பல வீடுகள்

நாடாளவிய ரீதியில் நிலவும் அடைமழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டவியல ;திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 24 …