Breaking News
Home / latest-update / 2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி

2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி

ஷங்கர் – ரஜினிகாந்த் – அக்‌ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக படம் ரிலீசான 4 நாட்களில் ரூ.400 கோடியை வசூலித்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே படத்தை வருகிற மே 2019-ல் சீனாவில் பிரம்மாண்டமாக 10,000 திரையரங்குகளில், 57,000 திரைகளில் (47,000 3டி திரைகள்) வெளியாக இருக்கிறது. #2Point0 #2Point0MegaBlockbuster #Rajinikanth

Check Also

கொழும்பு மருத்துவமனைக்கு இரத்தம் வழங்க விரும்புபவர்கள், யாழ் போதனா வைத்திசாலையில் வழங்கலாம்

நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயம் அடைந்தோரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி சேகரிக்கப்படுகிறது. கொழும்பு நாரஹன்பிட்டியில் …