Breaking News
Home / latest-update / பெண்கள் விடுதி படுக்கையறையில் ரகசிய கமரா வைத்த நபர் வசமாக சிக்கினார்….!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பெண்கள் விடுதி படுக்கையறையில் ரகசிய கமரா வைத்த நபர் வசமாக சிக்கினார்….!!

சென்னையில் பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கமெரா வைத்து படம் பிடித்த நபர் கைது செய்யப்பட்டார்.ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அறைகளை வாடகைக்கு எடுத்து விடுதி நடத்தி வருகிறார் சஞ்சீவ் (45).

இது பெண்களுக்கான தங்கும் விடுதி என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளார். இதனையடுத்து விடுதியில் பேயிங் கெஸ்டாக 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனிடையே அறையில் சீரமைப்பு பணிகள் செய்வதாக கூறி அடிக்கடி ஏதேதோ செய்துள்ளார் சஞ்சீவ். இதனையடுத்து அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு சஞ்வீவ் ரகசிய கமெரா வைக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படவே உஷாரான அவர்கள் அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தங்களது மொபைலில் உள்ள செல்போன் செயலி (Hidden Camera Detector App) மூலம் விடுதி அறையில் ரகசிய கமெராக்கள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். யாருக்கும் தெரியாமல் கழிவறை, படுக்கையறை, துணி மாட்டும் கைப்பிடி (ஆங்கர்) உள்ளிட்ட இடங்களில் கண்களுக்கு தெரியாத சிறிய அளவிலான ரகசிய கமெராக்கள் சஞ்சீவ் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து பெண்கள் அனைவரும் காவல் நிலையயத்தில் புகார் அளித்த நிலையில் பொலிசார் அந்த விடுதிக்கு சென்று ரகசிய கமெராக்களையும், எலக்ட்ரானிக் சாதனங்கள், 16 செல்போன், ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற போலி ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சஞ்சீவ் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், இவர் பல பெயர்களில் போலி ஆவணங்கள் வைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Check Also

வடக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இரத்து

வடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 200 பேருக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளன.  இரண்டு வருடங்கள் பூர்த்தியான உத்தியோகத்தர்களுக்கு …