Breaking News
Home / latest-update / விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் ஒரு தொகை மீட்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் ஒரு தொகை மீட்பு

புதுக்குடியிருப்பு, சுதந்திபுரம் பிரதேசத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த யுத்த உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் முல்லைத்தீவு முகாமின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 2250 டி 56 ரக தோட்டாக்கள், ஆர்.பி.ஜி. தோட்டக்கள் 03, 06 ஆடி செல் உட்பட மேலும் பல அயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் கிளிநொச்சி முகாமில் உள்ள தேடுதல் மற்றும் குண்டு செயலிழப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

Check Also

வடக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இரத்து

வடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 200 பேருக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளன.  இரண்டு வருடங்கள் பூர்த்தியான உத்தியோகத்தர்களுக்கு …