Breaking News
Home / latest-update / துரித மீள் எழுச்சிக்காக துரிதமாக செயல்படும் விவசாய அமைச்சு..! யாழ் விவசாயிகளுக்காக களத்தில் இறங்கிய பிரதியமைச்சர் அங்கஜன்..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

துரித மீள் எழுச்சிக்காக துரிதமாக செயல்படும் விவசாய அமைச்சு..! யாழ் விவசாயிகளுக்காக களத்தில் இறங்கிய பிரதியமைச்சர் அங்கஜன்..!!

இலைமடிச்சுக்கட்டி மற்றும் வெண்முதுகு தாவர தத்தி, கபில தாவர தத்தி தாக்கம் தொடர்பில் அறிந்தவுடன் சாவகச்சேரி மறவன்புலவு வயல் பகுதிகளுக்கு விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதி அமைச்சின் அதிகாரிகளுடன் இணைந்து நேரடியாக விசேட களப்பயணம் 23/11/ அன்று மேற்கொண்டார்.இதன் போது கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளுடனும் சம்பவங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.களப் பயணத்தின் போது இணைந்திருந்த பிரதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.பிரதேச விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து செயற்படுவதன் மூலம் இதனை இலகுவாக கட்டுப்படுத்தலாம். அல்லது வராமல் தடுக்கலாம். இவ்வாறான தருணங்களில் விவசாய சம்மேளனங்களின் செயற்பாடுகளும் அளப்பரியது எனவும் குறிப்பிட்டிருந்தார்.பயம் இன்றி பயிர் செய்வதற்கு, பிரதி அமைச்சரின் செயல்பாடுகள் மேலும் உந்துதலையும் நம்பிக்கையையும் அளிப்பதாகவும் விவசாயிகள் சார்பில் கருத்து வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.

Check Also

வடக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இரத்து

வடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 200 பேருக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளன.  இரண்டு வருடங்கள் பூர்த்தியான உத்தியோகத்தர்களுக்கு …