Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (14-11-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (14-11-2018)

இன்றைய ராசி பலன் (14-11-2018)
மேஷம்
நவம்பர் 14, 2018

இன்று நீங்கள் நினைத்த காரியம் கைகூடும். விருந்தினர் வருகை இல்லம் சிறக்கும். உறவுகள் மேன்மை என சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றம், பாராட்டு உண்டு. தேக ஆரோக்யத்தில் கவனம் தேவைப்படும். போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவை.

ரிஷபம்
நவம்பர் 14, 2018

இன்று தொழில் ரீதியான முயற்சிகள் அனுகூலமாகும். தேக ஆரோக்யத்தில் சிறு சிறு தொல்லை வரும். பணிச்சுமை சிரமம் தரும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதம் வரும். பொறுமையுடன் அனுசரிப்பது உத்தமம்.

மிதுனம்
நவம்பர் 14, 2018

இன்று உங்களுக்கு தேவையற்ற விஷயங்களில் மனக்குழப்பம் வரும். சுபகாரிய முயற்சி முன்னேற்றமாகும். பெரியவர்களின் ஆசி மன நிம்மதி தரும். பணவரவுகள் சுபிட்சமாக இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதம் வரும். சூழ்நிலையை அனுசரித்து பொறுமையுடன் செயல்படுவது உத்தமம்.

கடகம்
நவம்பர் 14, 2018

இன்று உங்களுக்கு சவாலான பிரச்னைகள் முன் நிறகும். உங்கள் புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் பிரச்னைகளை எதிர்கொள்வீர்கள். குடும்ப சூழ்நிலையில் மகிழ்ச்சி நிலவும். விருந்தினர் வருகை உற்சாகம் தரும். தொழில் ரீதியான டென்சன் மிகுந்திருக்கும். திட்டமிடல் அவசியம் தேவை.

சிம்மம்
நவம்பர் 14, 2018

இன்று வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். எதிர்ப்புகள் விலகும். ஆன்மிக சிந்தனை இறையருள் தரும். குழந்தைகள் பராமரிப்பு சிரமங்கள் இருக்கும். ரிப்பேர் செலவினங்கள் சிரமம் தரும். உங்கள் அத்தியாவசியத்தேவைகள் பூர்த்தியாகும். இல்வாழ்க்கையில் சுகபோகம் மிகுந்திருக்கும்.

கன்னி
நவம்பர் 14, 2018

உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் பாராட்டு, கவுரவம் கிட்டும். போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவை. வாயுத் தொல்லை சிரமம் தரும். நட்பு ரீதியான உதவி ஒத்தாசை உங்கள் சிரமங்களுக்குப்பரிகாரமாக இருக்கும்.

துலாம்
நவம்பர் 14, 2018

வளர்ப்பு பிராணிகளால் மகிழ்ச்சி கூடும். ஆன்மிக சிந்தனை உங்களுக்கு இறையருள் தரும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். தேக ஆரோக்யம் முன்னேற்றமாக இருக்கும். குடும்பப்பணிகளில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நலம். கடன் பிரச்னைகள் தீரும்.

விருச்சிகம்
நவம்பர் 14, 2018

இன்று சுபச் செலவினங்கள் இருக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகள் லாபகரமாக இருக்கும். உங்கள் தொழில் ரீதியான சூழ்நிலை முன்னேற்றமாக இருக்கும். அநாவசிய பிரச்னைகள் தவிர்ப்பது நலம். எதிர்பாராத பயண அலைச்சல் சிரமம் தரும்.

தனுசு
நவம்பர் 14, 2018

இன்று நீங்கள் கவனமாக பேச வேண்டிய நாள். வீண் பிரச்னைகளில் தலையிடாதீர்கள். மனசஞ்சலம் வரும். தொழில் ரீதியான உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு கவுரவம் சேர்க்கும். நீங்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் கைகூடும்.

மகரம்
நவம்பர் 14, 2018

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் வரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். ஞாபக மறதித் தொல்லை சிரமப்படுத்தும். காரியத்தடை, வீண் அலைச்சல் என சிரமங்கள் வரும். நட்பு ரீதியான உதவி ஒத்தாசை இருக்கும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும்.

கும்பம்
நவம்பர் 14, 2018

இன்று உங்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வெளியூர் பயண அலைச்சல் இருக்கும். பொருளாதார சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். நீங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறும். ஆன்மிக சிந்தனை ஆறுதல் தரும்.

மீனம்
நவம்பர் 14, 2018

இன்று குழந்தைகள் பராமரிப்பு சிரமங்கள் இருக்கும். குடும்ப விஷயங்களில் சிறுசிறு தொல்லை வரும். பொறுமையுடன் அனுசரிப்பது உத்தமம். தர்ம சிந்தனை இன்று அதிகம் இருக்கும். வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். மதிப்பு குறையும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்.

Check Also

வடக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இரத்து

வடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 200 பேருக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளன.  இரண்டு வருடங்கள் பூர்த்தியான உத்தியோகத்தர்களுக்கு …