Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (13-11-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (13-11-2018)

இன்றைய ராசி பலன் (13-11-2018)
மேஷம்
நவம்பர் 13, 2018

இன்று உங்களுக்கு அரசு அனுகூலம் கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வியாபார விருத்திக்கான வழிமுறை பிறக்கும். வாகன போக்குவரத்தில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்
நவம்பர் 13, 2018

இன்று யாருக்கேனும் வாக்கு கொடுத்திருந்தால் அவர்களுடைய கட்டுப்பாடு உங்களை சிரமப்படுத்தும். வீண் பயம் உங்களுக்கு மன சஞ்சலம் தரும். செய்யும் தொழிலில் லாபகரமான சூழ்நிலை இருக்கும். பணவரவுகள் உங்கள் சிரமங்களை குறைக்கும்.

மிதுனம்
நவம்பர் 13, 2018

இன்று உங்களுக்கு காரிய அலைச்சல் அதிகமிருக்கும். தேவையற்ற விஷயத்திற்கு பயப்படுவீர்கள். குடும்பப்பிரச்னைகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.

கடகம்
நவம்பர் 13, 2018

இன்று உங்களுக்கு அயனசயனபோகம் திருப்திகரமாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். நல்ல விருந்து உபசாரம் கிட்டும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தான தர்ம சிந்தனை உங்களுக்கு மிகுந்திருக்கும்.

சிம்மம்
நவம்பர் 13, 2018

இன்று உங்களுக்கு சுகபோகம் மிகுந்திருக்கும். கடினமான காரியத்தடை கூட எளிமையாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். தேக ஆரோக்கியம் கூடும். தொழில் ரீதியான சூழ்நிலைகளில் கடின உழைப்பு இருக்கும். குடும்பத்தில் நீங்கள் திட்டமிட்ட விஷயங்கள் கைகூடும்.

கன்னி
நவம்பர் 13, 2018

இன்று உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த முக்கியமான விஷயத்தில் காரியத்தடை வரும். பொருளாதார சூழ்நிலைகள் தாராளமாக இருக்கும். சுபகாரிய ஈடுபாடு அனுகூலமாகும். முன்கோபம் வரும். தவிர்ப்பது உத்தமம். உங்கள் பேச்சுக்கு மரியாதை வரும்.

துலாம்
நவம்பர் 13, 2018

இன்று உங்களுக்கு சுகபோகம் மிகுந்திருக்கும். நினைத்த காரியம் கைகூடும். நல்ல விருந்துபசாரம் கிடைக்கும். வாகன வசதி கிட்டும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருந்தாலும் காரிய சாதனை புரிவீர்கள். பொருளாதார வசதிகள் தாராளமாக இருக்கும்.

விருச்சிகம்
நவம்பர் 13, 2018

இன்று உங்களுடைய சிரமங்களில் இறையருள் பக்கபலமாக இருக்கும். ஆன்மிக சிந்தனை ஆறுதல் தரும். உங்கள் புத்திசாலித்தனமான செயல்பாடுகள் லாபம் பெறும். சுபச்செலவினங்கள் இருக்கும். எதிர்பார்த்த ஒரு விஷயம் கைகூடும்.

தனுசு
நவம்பர் 13, 2018

இன்று உங்களுக்கு தேவையற்ற விஷயங்களில் மனசஞ்சலம் ஏற்படும். அநாவசியமான விஷயங்களில் தலையிட வேண்டாம். சிக்கல் வரும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். காரியத்தடை சிரமம் தரும்.

மகரம்
நவம்பர் 13, 2018

இன்று உங்களுக்கு நினைத்த காரியம் கைகூடும். எதிர்பாராத வரவினங்கள் மகிழ்ச்சி தரும். அயனசயன போகம் என சகஸ்தானம் நன்றாக இருக்கும். தொழில் ரீதியான சூழ்நிலை கடின உழைப்பு இருக்கும். ரிப்பேர் செலவினங்கள் வரும்.

கும்பம்
நவம்பர் 13, 2018

இன்று உங்களுக்கு வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். முற்பகுதியை விட பிற்பகுதி லாபகரமாக இருக்கும். வெளியூர் பயண அலைச்சல் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் இன்று வெற்றிகரமாக கைகூடும். இறையருள் கிட்டும்.

மீனம்
நவம்பர் 13, 2018

இன்று உங்களுக்கு லாபகரமான சூழ்நிலை வரும். நினைத்த காரியம் கைகூடும். பணவரவு தாராளமாக இருக்கும். விருந்தினர் வருகை இல்லம் சிறக்கும். உறவுகள் மேம்படும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும்.

Check Also

வடக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இரத்து

வடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 200 பேருக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளன.  இரண்டு வருடங்கள் பூர்த்தியான உத்தியோகத்தர்களுக்கு …