Breaking News
Home / latest-update / காதல் தோல்வியின் விரக்தியால் இளம் யுவதி தற்கொலை….!!யாழ் மக்களை அதிர வைத்த சோகம்….!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

காதல் தோல்வியின் விரக்தியால் இளம் யுவதி தற்கொலை….!!யாழ் மக்களை அதிர வைத்த சோகம்….!!

யாழ்ப்பாணம் ஏழாலை மத்தி. சாடியடி, பகுதியைச் சேர்ந்த பரன் சுவர்னா (18) எனும் இளம் பெண் தற்கொலை முயற்சி காரணமாக கடந்த 14.10.2018 யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரிழந்துள்ளார்.இவர் காதல் தொடர்பு முறிந்த காரணத்தில் ஏற்பட்ட மனவருத்தத்தால், அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டும், கத்தியினால் தனது கரத்தை அறுத்துக் கொண்டும் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர் .

சம்பவம் தொடர்பாக,  குறித்த பரன் சுவர்னா என்ற பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரிபன் சுபாஸ் எனும் இளைஞனும் காதலித்து வந்ததாக தெரியவருகின்றது.இந்நிலையில் இருவரிற்கும் இடையில் சாதி வேறுபாடுகள் இருந்துள்ளதை காரணம் காட்டி பெண்ணின் தந்தை தனது மகளை எச்சரித்துள்ளார்.

இதேவேளை, இக்காதல் தொடர்பை விடுமாறும் தனது பெண்ணின் காதலனான ஸ்ரிபன் சுபாஸிற்கும் அறிவுரைகள் கூறி யிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  எவ்வாறெனினும் குறித்த யுவதி தவறான முடிவெடித்து தனது உயிரை மாய்த்துள்ளார். இது அப்பகுதி மக்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

வடக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இரத்து

வடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 200 பேருக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளன.  இரண்டு வருடங்கள் பூர்த்தியான உத்தியோகத்தர்களுக்கு …