Breaking News
Home / சமூகச் சாளரம்

சமூகச் சாளரம்

பிறந்து 13 நாட்களேயான ஆண் சிசுவை கிணற்றில் வீசிய பெற்றோர்?

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பூமரத்தடிச்சேனை பகுதியில் பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தையை கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் தாய் மற்றும் தந்தையை நேற்று கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்லடி பூமரத்தடிச்சேனை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.அப் …

Read More »

கோப்பாயில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்…..!! தீயில் முற்றாக கருகிப் போன முச்சக்கர வண்டி….!! ஒருவர் படுகாயம்….!!

யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதியில் இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.யாழ். கோப்பாய் மத்திய கல்வியியற்கல்லூரி ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது இத்தாக்குதல் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடத்தப்பட்டுள்ளது.இதன்போது சம்பவத்தில் படுகாயமடைந்த 53 வயதான செல்லத்துரை செல்வரஞ்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இப்பெற்றோல் குண்டுத் தாக்குதலில் வான் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் தீக்கிரையாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணையை …

Read More »

10 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கைது

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரசினி கடவு பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது தாயார் கண்ணூர் மகளிர் பொலிஸில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து மகளிர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அந்த மாணவி பொலிஸாரிடம் தெரிவித்தார். அந்த மாணவிக்கு பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. …

Read More »

யாழில் எச்.ஐ.வி விழிப்புனர்வு செயற்றிட்டம்

சர்வதேச எச்.ஐ.வி தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் செயற்றிட்டம் ஒன்று யாழ் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது. யாழ் சிறைச்சாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இந்த எச்.ஐ.வி விழிப்புனர்வு நிகழ்ச்சித்திட்டம் யாழ் நகரை மையப்படுத்தி இடம்பெற்றது. யாழ் கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறைச்சாலை வளாகத்திலிருந்து ஆரம்பமான எச்.ஐ.வி விழிப்புனர்வு நடைபவனி பண்ணை வீதி, வைத்தியசாலை வீதியூடாக சென்று யாழ் பிரதான தபால் அலுவலகத்தில் நிறைவடைந்து அங்கு விழிப்புனர்வு செயற்பாடுகள் இடம்பெற்றன. …

Read More »

வளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண் – 20 ஆண்டு சிறை?

எல்சால்வேடர் நாட்டை சேர்ந்த இளம்பெண் கோர்டெஸ். இவர் 12 வயது முதல் தனது வளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்டார். அதனால் கர்ப்பம் அடைந்தார். தொடக்கத்தில் அவர் அதை அறியவில்லை. கடுமையான ரத்தப்போக்கு மற்றும் வேதனையுடன் துடித்த அவரை வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டொக்டர்கள் அவர் கருக்கலைப்புக்கு முயன்றதாக சந்தேகம் அடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த பொலிஸார் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கோர்டெஸ் மீது வழக்கு …

Read More »

பாதுகாப்பு உத்தியோகத்தரை கத்தியால் குத்திய யாழ் இளைஞன் கைது

யாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கத்தியால் பாதுகாப்பு உத்தியோகத்தரை குத்திய இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று (14) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய சுரேஸ் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் …

Read More »

காதல் தோல்வியின் விரக்தியால் இளம் யுவதி தற்கொலை….!!யாழ் மக்களை அதிர வைத்த சோகம்….!!

யாழ்ப்பாணம் ஏழாலை மத்தி. சாடியடி, பகுதியைச் சேர்ந்த பரன் சுவர்னா (18) எனும் இளம் பெண் தற்கொலை முயற்சி காரணமாக கடந்த 14.10.2018 யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரிழந்துள்ளார்.இவர் காதல் தொடர்பு முறிந்த காரணத்தில் ஏற்பட்ட மனவருத்தத்தால், அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டும், கத்தியினால் தனது கரத்தை அறுத்துக் கொண்டும் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக …

Read More »