Breaking News
Home / வாழ்வியல்

வாழ்வியல்

வாழ்க்கையின் அங்கமாக மாறிய சமூக வலைதளம்

வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினி பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. கணினி பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணைய பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணைய கலாசாரம் உச்ச கட்ட வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம், நன்மை-தீமைகள் என இரண்டு பக்கங்களை கொண்டுள்ளது. பல்வேறு வலைதளங்கள் உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் …

Read More »

உயிர்த்தெழும் இயற்கை: நகரங்களில் மீண்டும் ஒலியெழுப்பும் பறவைகள்

நம் நாட்டினரும் உலக நாடுகளில் உள்ளவர்களும் முன்னொருபோதும் எதிர்கொள்ளாத ஒரு பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளோம். வாழ்வியல் முறைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்கின்றோம். எம்மைச் சுற்றி நாங்கள் அவதானித்தால், இயற்கை மீண்டும் எவ்வாறு உயிர்த்தெழுகின்றது என்பதை எம்மால் அறிந்துகொள்ள முடியும். உலகளாவிய ரீதியிலுள்ள நகரங்களில் மீண்டும் பறவைகள் ஒலியெழுப்பி இசைக்கத் தொடங்கியுள்ளன. சனநெரிசல் அதிகரித்துக் காணப்பட்ட பகுதிகளில் பல தசாப்தங்களாக காணத் தவறிய பட்சிகளையும் மிருகங்களையும் இன்று மீண்டும் காணக்கூடியதாக …

Read More »

எந்தெந்த பொருட்களில் கொரோனா வைரஸ் உயிர்வாழும்?

COVID 19 வைரஸ் பிளாஸ்டிக் அல்லது துருப்பிடிக்காத உலோகத்தில் மூன்று நாட்கள் செயலுருவில் இருக்கும் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. செப்பு அடுக்குகளில் நான்கு மணித்தியாலங்களும் காட்போர்ட் அடுக்குகளில் 24 மணித்தியாலங்களும் இந்த வைரஸ் நீடிக்க முடியும் என New England மருத்துவ சஞ்சியை தகவல் வெளியிட்டுள்ளது. இது சிறிய காற்று துகள்கள் அல்லது வாயு துள்களில் 3 மணி நேரம் செயலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத …

Read More »

பெண்களின் சமத்துவம், உரிமைகளை வலியுறுத்தும் மகளிர் தினம் உருவான வரலாறு

ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிடலாம். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக மகளிர் தினம் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றது அந்த காலம். ஆனால் கல் உடைக்கும் வேலையில் இருந்து கணினி துறை வரை அனைத்து துறைகளிலும் இன்றைக்கு மைல்கல்லாக மகளிர் விளங்கும் அளவுக்கு சாதனை படைத்து உயர்ந்துள்ளனர் என்றால் மிகையில்லை. இவ்வாறு சாதனை உயரத்தை எட்டி …

Read More »

தன்னம்பிக்கையே வெற்றியின் முதற்படி

யானையின் பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில் என்பது சான்றோர் வாக்கு. நாத்திகன் ஒருவன் மலை உச்சிக்கு செல்வதற்காக ஏறிக்கொண்டிருந்தான். திடீரென்று அவன் கால் வழுக்கியது. கீழே விழுந்தான். பாறையின் விளிம்பிற்கு மேல் நீட்டிக் கொண்டிருந்த வேரைப் பிடித்துக் கொண்டான். கீழே கிடுகிடு பள்ளம்; விழுந்தால் எலும்பு கூடக் கிடைக்காது. வேரைப் பிடித்துக் கொண்டிருந்த அவனுடைய பிடியோ நழுவிக் கொண்டிருந்தது. நடுநடுங்கினான். ‘கடவுளே! இந்த ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்று’ என்று …

Read More »

குடும்பங்களை பிரிக்கும் சமூகவலைத்தளங்கள்…

சமூக வலைத்தளங்கள் என்பது தெரிந்த உறவுமுறையைத் தாண்டி சமூகத்தில் பலரையும் ஒன்றிணைத்த தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. இருந்தாலும் சமூக வலைத்தளங்கள், உறவுகளை பிரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், டிக்டாக் என ஏராளமான சமூகவலைத் தளங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை தனிநபர்களின் கருத்துப் பகிர்வுக்கான முக்கிய இடமாகவும், சமூக தொடர்புத் தளமாகவும் இருந்தாலும், அவற்றால் ஏற்படும் உறவு முறிவுகள், கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தமது …

Read More »

உயர்ந்த எண்ணமே நல்வாழ்வை தரும்

உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே.. எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனைவயப்பட்டதாகவே தோன்றுகிறது. இறுக்கமான மனிதர்களாகவும், எந்திர கதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசையெல்லாம் பார்க்க முடிகிறது. சக மனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு …

Read More »

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்பதே வெற்றிக்கு வழி

பேதம் என்ற தமிழ் சொல்லுக்கு வேற்றுமை என்பது பொருளாகும். உண்மையில் இதற்கான பொருளை நாம் தேடவே தேவையில்லை. அன்றாட வாழ்க்கையில் காலம் காலமாக நம் நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் சூழலே இதற்கான விளக்கத்தை அளிக்கிறது. நிறைய பேர் சாதியினாலோ, மதத்தினாலோ ஏற்பட்டிருப்பது தான் பேதம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக சாதியும், மதமுமே நமது நாட்டில் உள்ள மிகப்பெரிய பேதமாகும். ஆனால், அதையும் தாண்டி நிறைய பேதங்கள் உள்ளன. ஆண், பெண் என்ற …

Read More »

இந்த வருடத்தில் உங்கள் ராசிக்கு உங்கள் காதல் வாழ்க்கை இப்படித் தான் இருக்குமாம்..!!

உங்கள் இராசிபலன்களின்படி, 2020 ஆம் ஆண்டின் மிகவும் இணக்கமான இணைப்பைக் கொண்டிருக்கும் ராசிக்காரர்களை பற்றி இங்கே காணலாம்.மேஷம் மற்றும் கும்பம்:2020இல் இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் நெருக்கும் உருவாகும். இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இந்த ஆண்டு அவர்கள் அனுபவிப்பதை விட சிறப்பாக வேறு பெற முடியாது.இவர்களின் உறவு மிகவும் சுவாரஸ்யமாகவும் எந்த சலிப்பும் இல்லாமல் இருக்கும். இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் சாகசத்திற்கான தாகம் உள்ளது.மேலும் இவர்கள் இருவரும் ஒவ்வொரு கணமும் …

Read More »

முத்தம் கொடுப்பதிலும் வாங்குவதிலும் இவ்ளோ விஷயம் இருக்கப்பா!!

காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது. அதில் முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சில விஷயங்கள் இதோ பாருங்கள். காதல் என்ற சொல்லை பொறுத்த வரையில் செல்களில் அதிக விருப்பத்தை ஏற்படுத்தும். காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது. காதலை வெளிப்படுத்தும்வகையில் முத்தம் மிக முக்கியமாக இருக்கிறது. ஆண்கள் முத்தங்கள் மூலம் பெண்களின் பல்வேறு உணர்வுகளை தூண்டுகிறது. அனைத்து ஜோடிகளும் நெற்றி, கன்னம், கண்கள் மற்றும் உணர்ச்சி அளிக்கக்கூடிய …

Read More »