Breaking News
Home / உலகம்

உலகம்

பொம்மை துப்பாக்கியை காட்டி போலீசை மிரட்டிய சிறுவன் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியை காட்டி போலீசை மிரட்டிய 14 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாஷிங்டன்: அமெரிக்காவில் பீனிக்ஸ் புறநகர் பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது 14 வயது சிறுவன் ஒருவன் காரின் அருகே துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தான். போலீசாரை பார்த்ததும் அவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். அவனது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவன் ஒரு கார் திருடன் என நம்பினர். எனவே …

Read More »

சொந்த மகளுக்கே இணையத்தளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை பாலியல் குற்றச்சாட்டில் அதிரடியாக கைது…!!

பிரான்சில் இணையதளம் மூலமாக சொந்த மகளுக்கே தந்தை ஒருவர் காதல் வலை வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்சின் பொபினி பகுதியைச் சேர்ந்த நபர் தந்தை ஒருவர் காதலர்களை தேடும் சமூகவலைதளம் மூலம் தன்னுடைய சொந்த மகளுக்கு காதல் வலை வீசியுள்ளார்.இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, மகளுக்கு அவர் பல முறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து …

Read More »

தமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட மாணவி….!!

மெல்பேர்ன் வடக்கு பகுதியில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் Bundoora பகுதியில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விக்டோரிய பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். மெல்பேர்ன் Greensborough பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான சந்தேநபரை இன்று முற்பகல் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இஸ்ரேலிய மாணவி Aiia Maasarwe என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களாக மாணவியின் படுகொலை மர்மம் நிறைந்ததாக காணப்பட்டதுடன் …

Read More »

கர்ப்பிணியான காதலியைக் கொன்று புதைத்த காதலன்….!! தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தை திருமணம் செய்ய வலியுறுத்தும் தந்தையால் பரபரப்பு…..!!

கர்ப்பிணிப் காதலியை இளைஞர் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் காதலியின் சடலத்தை அவர் திருமணம் செய்து கொள்ள இறந்த பெண்ணின் தந்தை வலியுறுத்தியுள்ள சம்பவமொன்று நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது.பிரின்ஸ் ஒவாபி என்ற இளைஞரும் பெர்தா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், பெர்தா கர்ப்பமடைந்தார். இதன்போது, பிரின்ஸ் வீட்டுக்கு பெர்தா வந்த போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் பெர்தாவை கொலை செய்த பிரின்ஸ் சடலத்தை தனது வீட்டிலேயே புதைத்தார். …

Read More »

முன்னாள் ஜனாதிபதி எச்.டபிள்யூ.புஷ் உடல் முழு அரச மரியாதைகளுடன் நல்லடக்கம்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெபர்ட் வோக்கர் புஷ் (ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.அவர் கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை அமெரிக்காவின் ஜனாதிபதி பதவி வகித்து வந்தார். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் அவர் பதவி வகித்தார்.நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டும், வயோதிபம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த …

Read More »

ஆப்கானிஸ்தான்- ராணுவம் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட தலிபான் பயங்கரவாதிகள் 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட 10 தலிபான் பயங்கரவாதிகள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #Talibanskilled காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள பர்யாப் என்ற இடத்தில் தலிபான்களை குறிவைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதியான மாவ்லாலி நஸ்ரத்துல்லா உள்பட 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் …

Read More »

கனடாவில் ஆணுடன் இணைந்து இளம் தமிழ் பெண்ணின் மோசமான செயல்!

கனடாவில் இரு தமிழர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.ரொரன்ரோவில் ஆண் மற்றும் பெண் இருவர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.எனினும் அவர்கள் மறுவாழ்வு பெற்றுக் கொள்வதற்கு மிகவும் பொருத்தமானவர்கள் என நீதிபதி கூறியுள்ளார்.மிதுஷா பூபாலசிங்கம் மற்றும் ஜீவன் நாகேந்திரன் ஆகிய இருவரும் கடந்த வருடம் ஜுன் மாதம் Halifax என்ற பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். குறித்த இருவரும் பிள்ளைகளின் உணவு பைகள், மற்றும் துணிகளில் …

Read More »

இத்தாலி இரவு களியாட்ட விடுதியில் நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் உள்ள இரவு களியாட்ட விடுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இத்தாலியில் அட்ரியாட்டிக் கடற்கரை நகரமான அங்கோனா அருகே உள்ள புகழ்பெற்ற ஒரு இரவு களியாட்ட விடுதியில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ராப் பாடகர் சிபேரா எபஸ்தாவின் கச்சேரியைக் கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.  அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முண்டியடித்துக்கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேற …

Read More »

பொதுப் போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக அறிவித்து பெரும் வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…!!

ஐரோப்பிய நாடான லக்ஸம்பெர்க் தனது குடிமக்கள் அனைவருக்கும் பேருந்து, ரயில் மற்றும் ட்ராம் உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்து வசதிகளையும் முற்றிலும் இலவசம் என்று அறிவித்துள்ளது.சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறையாலும் வாகன நெரிசலைக் குறைக்கவும் உலகின் முதல் நாடாக குடிமக்கள் அனைவருக்கும் பொதுப் போக்குவரத்து இலவசம் என லக்ஸம்பெர்க் அறிவித்துள்ளது.பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய மூன்று நாடுகளுடன் எல்லையைப் பகிரும் நாடான லக்ஸம்பெர்க் நாட்டின் மொத்த மக்கள் தொகை 560,000.இந்நாட்டில் …

Read More »

பிரான்ஸ் வன்முறை – இழுத்து மூடப்படும் ஈபிள் கோபுரம்

பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான “மஞ்சள் ஜாக்கெட்” என்னும் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சத்துக்கிடையில் நாளை (சனிக்கிழமை) ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் முழுவதும் 89,000 ​பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், தலைநகர் பாரீஸில் இராணுவ வாகனங்கள் நிறுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் எய்ட்வார் ஃபிலிப் அறிவித்துள்ளார். மேலும், பாரீஸின் சேம்ப்ஸ்-எலைசீஸ் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களை மூடுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். சில அருங்காட்சியகங்களும் …

Read More »