Home / இந்தியா

இந்தியா

போலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் – காங்கிரசாருக்கு ராகுல் காந்தி அறிவுரை

பாராளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. இந்த தகவல் பாஜக கூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சற்று சஞ்சலத்தையும் சலசலப்பையும் உண்டாக்கியுள்ளது. இந்நிலையில், சில ஊடகங்களின் போலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் என காங்கிரசாரை ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். …

Read More »

ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலால் 12 பேர் உயிர் இழப்பு

ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வர முடியவில்லை. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். வீட்டுக்குள் வெப்ப காற்று வருவதால் மக்கள் தூங்க முடியவில்லை. வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விஜயநகரத்தில் 2 …

Read More »

வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. – வைரலான வீடியோவின் மறுப்பக்கம்

இந்திய பொது தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை துவங்கி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், 2019 இந்திய பொது தேர்தல் பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அவ்வாறு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க. மாற்ற முயற்சி செய்ததாக செய்தி தொகுப்பாளர் …

Read More »

மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்… அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்

தமிழகத்தில் கோடீஸ்வர தம்பதியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தில், அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது. மதுரையில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த வேங்கட சுப்ரமணியன் (41) என்பவரும் மீனாட்சி (33) என்ற பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஓன்லைனில் தொழில் செய்து வந்த இந்த தம்பதி கோடீஸ்வரர்களாக இருந்தனர். அதில் வந்த பணத்தை பல வகையில் முதலீடு செய்தனர். திருமணமாகி …

Read More »

அருணாசலப்பிரதேசத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் – எம்எல்ஏ உள்பட 7 பேர் பலி

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தவர் திரோங் அபோ. இந்நிலையில், மேற்கு கோன்சா பகுதியில் உள்ள திரப் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் என்.பி.பி. கட்சி எம்.எல்.ஏ.வான திரோங் அபோ உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மேகாலயா மாநில முதல் மந்திரி கன்ராட் சங்மா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அருணாசலப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை …

Read More »

இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு சிறைபிடிப்பு- போதைப்பொருட்கள் பறிமுதல்

இந்திய கடலோர காவல் படையினர் இன்று சர்வதேச கடல் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு மீன்பிடி படகு, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்ததை கவனித்தனர். உடனடியாக அந்த மீன்பிடி படகை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர். படகை சோதனையிட்டபோது, அதில் 194 பாக்கெட்டுகளில் போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து …

Read More »

மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்- பாஜக சொல்கிறது

மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. கமல் நாத் முதல்வராக பொறுப்பேற்றார். 230 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு 114 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 109 உறுப்பினர்களும் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 உறுப்பினர்களும், சமாஜ்வாடி கட்சிக்கு ஒரு உறுப்பினரும், 4 சுயேட்சை உறுப்பினர்களும் உள்ளனர். ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், …

Read More »

வீட்டுக்குள் 20 ஆண்டாக சிறை வைக்கப்பட்ட பெண்

கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவரை அறையில் பூட்டி சிறை வைத்திருப்பதாக பெண்கள் கமி‌ஷன் நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. பெண்கள் கமி‌ஷன் நிர்வாகி ஷாகிதா கமல் இது பற்றி கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா கவனத்திற்கு கொண்டுச் சென்றார். உடனே அவர் வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்ட பெண்ணை உடனடியாக மீட்கும் படி அப்பகுதி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கொல்லம் வழுதக்கால் பகுதி போலீசார் பெண் சிறை …

Read More »

இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே சந்தேகப்படும் வகையில் காரில் சுற்றிய 5 பேர் கைது

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சொகுசு காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.9.88 லட்சம் பணம் இருந்தது. இதுபற்றி காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதையடுத்து காரில் இருந்த 5 பேரையும் எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்து காவல் …

Read More »

கணவரிடம் கிடைக்காத அன்பு…. வேறு நபரிடம் கிடைத்ததால் தடம்மாறிய பெண்! இறுதியில் நிகழ்ந்த கொடூரம்

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர் கள்ளக்காதலனால் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டுள்ள கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனிடம் கிடைக்காத அதிக பாசம் புதிய நபரிடம் கிடைக்க அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்பு தனிமையில் சந்தித்து பழகி வந்த இவர்களின் விவகாரம் குறித்த பெண்ணின் கணவருக்கு தெரிந்துள்ளது. இதுகுறித்து கணவர் கண்டித்ததால் அப்பெண் கள்ளக்காதலிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர், அப்பெண் முகத்தில் …

Read More »