யூடியூப் வீடியோக்களை பார்வையிட இணையம் தேவையில்லை

May 22, 2015 1:06 am0 comments
யூடியூப் வீடியோக்களை பார்வையிட இணையம் தேவையில்லை

இனிமேல் யூடியூப் வீடியோக்களை பார்வையிட இணைய இணைப்பபு தேவையில்லை. வீடியோக்களை ஆப்லைனிலும் பார்வையிடும் வசதியை ஏற்படுத்தியுள்ளதாக யூடியூப் அறிவித்துள்ளது. இதற்கென யூடியூப் அப்ஸை ஸ்மார்ட் தொலைபேசியில் நிறுவியிருக்க வேண்டும். அத்துடன் இணையத்திலிருக்கும் போது Offline இல் பார்வையிடுவதற்கென தரப்பட்டிருக்கும் யூடியூப் வீடியோ இணைப்புக்களில் கீழுள்ள பட்டனை அழுத்தவேண்டும். பின்னர் இணைப்பில்லாத தருணங்களில் அவற்றை பார்வையிட முடியும். இதுபற்றிய வீடியோ விளக்கம் இங்கே. யூடியூப் அப்ஸில் ஆப்லைன் வசதி கடந்தவருடமே அறிமுகமாகியிருந்தபோதும் […]

Read more ›

இசைக்கு ஏற்றாற்போல் தீயாய் நடனம் ஆடும் ஸ்பீக்கர் (வீடியோ இணைப்பு)

May 21, 2015 2:02 pm0 comments
இசைக்கு ஏற்றாற்போல் தீயாய் நடனம் ஆடும் ஸ்பீக்கர் (வீடியோ இணைப்பு)

இசைக்கு ஏற்றாற்போல் பற்றி எரியும் ஸ்பீக்கர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கணனியில் இசைக்கு ஏற்றபடி மாறும் பிம்பங்கள் ஏற்கனவே பழக்கமான ஒன்று. ஆனால் ’சவுண்ட் டார்ச்’ எனப்படும் நவீன ஸ்பீக்கரில் கிடைக்கும் அனுபவம் புதுமையாக இருக்கிறது. இசைக்கு தகுந்தாற்போல் ஒரு தாளலயத்தோடு எரியும் ஸ்பீக்கரின் அழகு இசையை மறந்துவிட்டு அந்த தீயின் நடனத்தை ரசிக்க வைக்கிறது. இதன் விலை 160 டொலர் எளிதில் சார்ஜ் செய்யும் பேட்டரியால் இந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் […]

Read more ›

வந்துவிட்டது ஸ்மார்ட் வளையம்

May 20, 2015 2:08 pm0 comments
வந்துவிட்டது ஸ்மார்ட் வளையம்

ஸ்மார்ட்போனை பாக்கெட்டிலோ அல்லது கைப் பையிலோ சைலன்ட் மோடில் வைத்துவிட்டால் எந்த அழைப்பு வந்தாலும் தெரியாது. முக்கிய போன் அழைப்புகளை எடுக்க முடியாதபட்சத்தில், அதனால் பல சிக்கல்கள் வரலாம். அல்லது தொழில் வாய்ப்புகளைக்கூட இழக்க நேரிடலாம். அதற்குத் தீர்வு சொல்கிறது இந்த ஸ்மார்ட் வளையம். இதை கையில் அணிந்து கொண்டால் ஸ்மார்ட்போனில் அழைப்பு வரும் நேரத்தில் கையில் அதிர்வுகள் மற்றும் சமிக்கைகள் கொடுக்கும். கையில் அணியும் பேண்ட் போல இருப்பதால் […]

Read more ›

புதிய தொழில்நுட்பத்தில் QR Code

May 19, 2015 2:11 pm0 comments
புதிய தொழில்நுட்பத்தில் QR Code

Quick Response எனப்படும் விரைவான செயற்பாட்டினை சாத்தியப்படுத்தும் தொழில்நுட்பமான QR Code தற்போது புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது.அதாவது இதுவரை காணப்பட்ட தொழில்நுட்பத்தில் புள்ளி உருவான படங்கள் காணப்படும், ஆனால் தற்போது புள்ளிகள் அற்றதும், புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டதுமான QR Code இனை உருவாக்க முடியும். Visualead நிறுவனத்தினால் இம்மாத ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட QR Code சேவையினை 500,000 வரையானவர்கள் இதுவரை பயன்படுத்தி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Read more ›

ஏழு வகையான பதிப்புக்களாக ஒரே நேரத்தில் வெளியாகும் விண்டோஸ் 10

May 18, 2015 1:19 am0 comments
ஏழு வகையான பதிப்புக்களாக ஒரே நேரத்தில் வெளியாகும் விண்டோஸ் 10

மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் ஒரிஜினல் பதிப்பினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ள நிலையில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதன்படி கடந்த வாரம் விண்டோஸ் 10 இயங்குதளமே விண்டோஸ் தொடரின் இறுதி இயங்குதளமாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது விண்டோஸ் 10 இயங்குதளமானது ஒரே நேரத்தில் 7 வகையான பதிப்புக்களாக வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு சாதனங்களை அடிப்படையாகக் கொண்டு Home, Mobile, Pro, […]

Read more ›

மனிதனை இயந்திரங்கள் கட்டுப்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

May 17, 2015 1:46 pm0 comments
மனிதனை இயந்திரங்கள் கட்டுப்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

எதிர்­வரும் 100 ஆண்டுகளில் மனிதர்களை ரோபோக்கள் எனப்படும் இயந்திரங்கள் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை உலகப் புகழ்பெற்ற பிரித்தானிய பௌதிகவியலாளரான ஸ்டீவன் ஹவ்கிங் விடுத்துள்ளார். அண்மையில் லண்டனில் நடைபெற்ற நவீன மதிநுட்பம் தொடர்பான மாநாட்டில் அவர் உரையாற்றும் போது இந்த எச்சரிக்கையை விடுத்தார். செயற்கை மதிநுட்பமானது மனிதர்களின் முடிவுக்கு வழிவகை செய்யக் கூடும். செயற்கை மதிநுட்பத்துடன் கூடிய ரோபோக்களின் உருவாக்கமானது அந்த செயற்கை மதிநுட்பத்தை யார் […]

Read more ›