Breaking News
Home / admin (page 5)

admin

நேபாளத்தில் உலகின் குள்ள மனிதர் மரணம்

உலகிலேயே மிக மிக குள்ளமான மனிதராக வாழ்ந்தவர் ககேந்திர தபா. 27 வயதான இவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி பிறந்த இவரது உயரம் 67.08 சென்டி மீட்டர். இவரது மொத்த உடல் எடையே வெறும் 6 கிலோதான். கடந்த 2010-ம் ஆண்டு நிலவரப்படி உலகிலேயே மிக மிக குள்ளமான மனிதராக இவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் …

Read More »

சீனாவில் தொடர்ந்து பிறப்பு விகிதம் குறைவு

சீனா கடந்த 1949-ம் ஆண்டு முதல் கம்யூனிச நாடாக உள்ளது. இந்த அரசு தொடங்கியது முதல் அங்கு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாடு திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அங்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் சட்டமாக்கப்பட்டது. அன்று முதல் அங்கு மக்கள் தொகை பெருக்கம் பெருமளவில் குறைந்தது. அதனால் குழந்தைகள் பாதிப்பு விகிதம் ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் தேசிய மக்கள் தொகை …

Read More »

‘வார்த்தைகளில் கவனம் தேவை’ -ஈரான் தலைவருக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல்கள் குறித்து அனைவரும் அறிந்ததே. இரு நாடுகளுக்கிடையேயான போர்ப்பதற்றத்தை தணிக்க வல்லரசு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. எண்ணெய் வளமுடைய வளைகுடா நாட்டு பகுதிகளில் ஏற்பட்ட பதற்றத்தினால் பல உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. ஈரானின் முக்கிய தளபதி அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை ஈரான் தாக்கியது. இதையடுத்து, இரு நாட்டு அதிபர்களும், முக்கிய தலைவர்களும் தங்களது நாட்டின் ராணுவ பலத்தை …

Read More »

உத்தரபிரதேசத்தில் உயிரோடு பெண் எரித்துக்கொலை

உத்தரபிரதேச மாநிலம் பிஜோனூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அங்குள்ள ஆழ்துளை கிணறு அருகே அந்த பெண்ணின் பிணம் கிடந்தது. கட்டிலில் கட்டப்பட்டு எரிந்த நிலையில் அந்த பிணம் கிடந்தது. யாரோ மர்ம மனிதர்கள் அந்த பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்துக் கொன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கி தோட்டாக்களும் கிடந்தன. இதனால் அவரை …

Read More »

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வன்முறையை தூண்டும் வகையிலான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்கும் வகையில் இணையதளம் மற்றும் செல்போன் சேவைகள் தடை செய்யப்பட்டன. அதன்பின்னர் மாநிலத்தில் அமைதி திரும்பி வரும் நிலையில், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. அவ்வகையில், தடை செய்யப்பட்ட செல்போன் சேவை இன்று தொடங்கி உள்ளது. ஜம்மு …

Read More »

ஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் – புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூர் மாவட்டத்தில் உள்ள உத்தம்சிங் நகரைச் சேர்ந்த நிர்மல்சிங் என்பவர் போலீசில் கடந்த மாதம் 26-ந்தேதி தனது நாயை காணவில்லை என்று புகார் அளித்தார். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி அமித்குமார் என்பவர் ஒரு நாயை காசீப்பூர் ரெயில் நிலைய பகுதியில் இருந்து மீட்டு வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டார். அதை பார்த்த நிர்மல்சிங்கின் மகன் தனது தந்தையிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து நிர்மல்சிங் நேற்று …

Read More »

நிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 குற்றவாளிகளையும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா, தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், சம்பவம் நடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் சிறுவன் என்றும், அதனால் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு …

Read More »

தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்கள்- நாளை, போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன் வாடிமையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இதில் 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு …

Read More »

மிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் – கேஎல் ராகுல்

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடி 80 ரன்கள் குவித்த கே.எல் ராகுல் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்நிலையில், இடைநிலை ஆட்டக்காரராக …

Read More »

தொடக்க வீரராக ரோகித் சர்மா புதிய சாதனை – சச்சின், ஹசிம் அம்லா சாதனைகளை முறியடித்தார்

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. இந்நிலையில், நேற்றைய போட்டியில், 42 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக புதிய சாதனை படைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் …

Read More »