Articles by: yosainews

சாவகச்சேரியில் இளைஞர்கள் இருவர்மீது வாள்வெட்டு!

March 1, 2015 1:55 am0 comments
சாவகச்சேரியில் இளைஞர்கள் இருவர்மீது வாள்வெட்டு!

சாவகச்சேரி, கெருடாவில் பகுதியில் இளைஞர்கள் இருவர் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதில் இருவரும் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம்  சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு இடம்பெற்றது. சம்பவத்தில் கெருடாவிலைச் சேர்ந்த செல்வராஜா ரவீந்திரன் (வயது-28), சிவகுமார் சோபன்(வயது -27) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். சோபன் என்பவர் கெருடாவிலில் கடை நடத்திவருபவர் என்றும், இன்று இரவு கடையைப் பூட்டிவிட்டு நண்பருடன் வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் எதிரே […]

Read more ›

அதிகரிக்கும் ஸ்மார்ட் போன் மோகம்: விடுபட சூப்பரான வழிகள்!

1:53 am0 comments
அதிகரிக்கும் ஸ்மார்ட் போன் மோகம்: விடுபட சூப்பரான வழிகள்!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை என அனைவரின் கைகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது ஸ்மார்ட் போன்கள். இதை எந்நேரமும் பயன்படுத்திக் கொண்டிருப்பதால், அருகில் இருப்பவர்களிடம் மனம்விட்டு பேசுவது கூட குறைந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் மன அழுத்தம் அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் கேத்தரின் ஸ்டீனர் ஸ்மார்ட் உள்ளிட்ட உளவியல் வல்லுநர்கள் போன் மோகத்தின் பாதிப்பைக் குறைப்பதற்கான வழிகளைத் தெரிவித்துள்ளனர். * ஸ்மார்ட் போன் பயன்பாட்டுக்கு […]

Read more ›

கர்ப்ப காலத்தில் சூடான பொருட்களை தவிர்ப்பது ஏன்?

1:52 am0 comments
கர்ப்ப காலத்தில் சூடான பொருட்களை தவிர்ப்பது ஏன்?

கர்ப்பமாக இருக்கும் போது சூடான பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று சொல்வதுண்டு. அதற்கு காரணம், உணவுப் பொருட்களை சூடாக சாப்பிடும் போது உணவுக்குழாய் புண்பட்டு அல்சர் வர வாய்ப்பிருக்கிறது. கர்ப்ப காலங்களில் இப்பிரச்னை ஏற்பட்டால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். * கர்ப்ப காலத்தில் நீர் வறட்சியை சமாளிக்க குளிர்ச்சியை உணவுகளை மனம் தேடும், அந்த நேரத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் சளி, இருமல் ஏற்பட வாய்ப்புண்டு. […]

Read more ›

இலங்கையை பின்னுக்குத் தள்ளி மோசமான சாதனை படைத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

1:51 am0 comments
இலங்கையை பின்னுக்குத் தள்ளி மோசமான சாதனை படைத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

உலகக்கிண்ணத் தொடரில் குறைந்த ஓட்டங்களை பதிவு செய்திருந்த அணிகள் பட்டியலில் இலங்கை அணியை முந்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான இன்றைய உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 102 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் உலகக்கிண்ண போட்டிகளில் குறைந்த ஓட்டங்கள் குவித்த அணிகள் வரிசையில் அந்த அணி இலங்கையை பின்னுக்கு தள்ளி மோசமான சாதனை படைத்தது. கடந்த 2003ம் […]

Read more ›

எந்த ராசிக்காரர்கள் காதலில் கில்லாடிகள் என்பதை தெரிந்து கொள்ள..!

February 28, 2015 1:47 pm0 comments
எந்த ராசிக்காரர்கள் காதலில் கில்லாடிகள் என்பதை தெரிந்து கொள்ள..!

காதல் என்ற மந்திர வார்த்தைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். காதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம் அதிகம். என்ன ராசிக்காரர்கள் காதலில் கில்லாடிகள் என்றும் யார், யார் காதலில் வெற்றி பெற முடியும் என்று தெளிவாக கூறியிருக்கிறார்கள் சோதிடவியல் வல்லுநர்கள். காதல் நாயகன் : எதிலும் முதன்மையானவராக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால், இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். […]

Read more ›

வைட்டமின் நிறைந்த உணவு பொருட்கள்

1:45 pm0 comments
வைட்டமின் நிறைந்த உணவு பொருட்கள்

வைட்டமின் ஏ- பால், முட்டை, கேரட், மீன், பப்பாளி, பி1- ஈஸ்ட், முழு தானியங்கள், பயறுகள், ஈரல் பி2- கோதுமை, முட்டை, பால், ஈரல், ஈஸ்ட் பி6- ஈஸ்ட், மாமிசம், ரொட்டி, பட்டாணி பி12- ஈஸ்ட், பால், முட்டை சி- புளித்த பழங்கள் டி- சூரிய ஒளி, வெண்ணெய் ஈ- முளைவரும் கோதுமை, கீரை, பால் கே- முட்டைகோஸ், பச்சை பட்டாணி, காய்கறிகள் நெல்லிக்காயில் அதிகம் காணப்படும் வைட்டமின் சி […]

Read more ›

பெண்களின் முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

1:43 pm0 comments
பெண்களின் முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

திராட்சை பழம் நல்லவகை மது தயாரிப்பதற்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் நல்ல மருத்துவ குணங்களும் உண்டு. இப்பழத்தில் உள்ள ரெஸ்வெராட்ரால் அல்லைமர் நோயை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது. இவை உடம்பில் உள்ள கொழுப்பையும் சிறுநீரக உறுப்பில் உள்ள யூரிக்  அமிலத்தையும் நீக்க உதவுகின்றது. முகத்தை சுத்தப்படுத்தும் வெளிரென்ற முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதமுள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில்  ஒரு மாஸ்க் […]

Read more ›

புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த செங்கலடி இளைஞன் 20 நாட்களின் பின் உயிரிழப்பு

1:41 pm0 comments
புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த செங்கலடி இளைஞன் 20 நாட்களின் பின் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூருக்கும் செங்கலடிக்கும் இடைப்பட்ட புகையிரதப் பாதையில் புகையிரதத்தில் மோதுண்டு காயமடைந்திருந்த இளைஞன் வியாழன் இரவு மரணமடைந்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 07.02.2015 திகதியன்று மாலை புகையிரத்தில் மோதுண்ட விபத்தில் செங்கலடியைச் சேர்ந்த சரவணபவன் சங்கீதன் (வயது 17) என்ற இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகிய நிலையில் மற்றைய அவரது சகபாடியான கந்தசாமி பிறேமகாந்தன் (வயது 15) படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். […]

Read more ›

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 8 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள்

1:39 pm0 comments
யாழ். போதனா வைத்தியசாலைக்கு 8 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள்

பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நினைவாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுமார் 8 மில்லியன் ரூபாய் பெறுமதியான என்புமுறிவு உபகரணங்கள் சனிக்கிழமை (28) வழங்கப்பட்டுள்ளது.  பேராசிரியர் சு.வித்தியானந்தனின் குடும்பத்தினரால் (அமெரிக்கா) இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, என்புமுறிவு சத்திரசிகிச்சை உபகரணம், வீடியோ மூலம் சிகிச்சை அளிக்கும் உபகரணம், மார்பு சிகிச்சை உபகரணம் போன்ற வகையிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. உபகரணங்கள் அனைத்துலக மருத்துவ நல நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டொக்டர். ரி. சத்தியமூர்த்தியால் யாழ்.போதனா […]

Read more ›

ஆசிரியர் தாக்கி மாணவி வைத்தியசாலையில்? – செட்டிகுளம்.

1:38 pm0 comments
ஆசிரியர் தாக்கி மாணவி வைத்தியசாலையில்? – செட்டிகுளம்.

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் தனது கையால் அடித்ததில் மயக்கமடைந்த மாணவி செட்டிகுளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more ›