Breaking News
Home / admin (page 20)

admin

உக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் திடீர் ராஜினாமா

உகரைனின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி முதல் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஒலெக்ஸி ஹான்சருக். ஹான்சரூக் ஒரு வழக்கறிஞர் ஆவார். பிரதமராக பதவியேற்கும் முன்பு உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், உக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக், தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கியிடம் அளித்துள்ளார். ‘அதிபரின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கே இந்த பதவிக்கு நான் வந்தேன். …

Read More »

போரை தவிர்க்க ஈரான் விரும்புகிறது- அதிபர் ஹசன் ரவுகானி

ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல்கள் குறித்து அனைவரும் அறிந்ததே. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான போர்ப்பதற்றத்தை தணிக்க வல்லரசு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஈரான் ராணுவ படைத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்த அமெரிக்கா, 11 வீரர்கள் காயமடைந்துள்ளதாக …

Read More »

எம்எஸ் டோனி இந்தியாவுக்கான அவரது கடைசி ஆட்டத்தில் ஆடிவிட்டார்: ஹர்பஜன் சிங்

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற எம்எஸ் டோனி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் விளையாடாமல் உள்ளார். இந்நிலையில் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த ஆறு மாதமாக இந்திய அணிக்காக விளையாடாமல் இருப்பதால் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. …

Read More »

4 ரன்னில் சதத்தை கோட்டை விட்டார் ஷிகர் தவான்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே பந்துக்குபந்து ரன்கள் அடித்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீரான வகையில் உயர்ந்தது. இந்தியா 8.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் …

Read More »

பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு

பாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. அதிக பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் இருக்கிறார்கள். ஜில் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராதா கிருஷ்ணா இப்படத்தை …

Read More »

ஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார். இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா உக்ரைன் வீராங்கனையான நாடியா கிச்செனோக்குடன் இணைந்து சிறப்பாக விளையாடி வருகிறார். லீக் போட்டிகளில் எளிதாக வென்ற சானியா மிர்சா ஜோடி, கால் …

Read More »

காணும் பொங்கல்- சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்

காணும் பொங்கலையொட்டி இன்று தமிழகம் முழுவதும் சுற்றுலாதலங்களில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னையில் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, பொருட்காட்சி திடல் மற்றும் பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றில் காலையிலேயே கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மெரினா கடற்கரையில் மட்டும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சென்னை முழுவதும் …

Read More »

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்

அமெரிக்காவை சேர்ந்த தேடுப்பொறி நிறுவனமான கூகுள், 2019 நான்காவது காலாண்டில் முன்னணி மொபைல் செயலிகள் பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக ஃபேஸ்புக்கை முந்தியிருக்கிறது. கடந்த காலாண்டில் மட்டும் கூகுள் செயலியை சுமார் 85 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். இதே காலக்கட்டத்தில் ஃபேஸ்புக் செயலி சுமார் 80 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. முன்னணி செயலிகள் பட்டியலை சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வில் கடந்த …

Read More »

தன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்

இக்கட்டான சூழ்நிலையில் நம் மனதில் இருக்கும் பயத்தினை நீக்குவதற்கான ஒரு சிறந்த வழிபாடு தான் இந்த வாராஹி வழிபாடு. இந்த மூல மந்திரத்தை உச்சரிக்கும் போது நம்மை அறியாமலேயே நம் மனதிலுள்ள பயமானது நீக்கப்படும். உங்களுக்கான வாராகி அம்மனின் மூல மந்திரம் இதோ. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் || நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி || அந்தே அந்தினி …

Read More »

ஜிசாட்-30 செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டப்படி இன்று அதிகாலை 2.35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து அதிக எடையை சுமந்து செல்லும் ஏரியான்-5 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது, 2020 ஆம் ஆண்டில் இஸ்ரோ செலுத்திய முதல் செயற்கைக்கோள் இதுவாகும். இதன் எடை 3,357 கிலோ ஆகும். திட்டமிட்டப்படி சரியான பாதையில் …

Read More »